அத்தகைய நன்னெறியிற் செல்லாது பொற்கொழுக்கொண்டு வரகுக்கு உழுவார்போன்று வீணாக அழிவாரும் பலர். அதனால் முழுமுதற் சிவபெருமானை அவனது திருவருளாகிய பேரறிவுப் பேரொளியால் தொடர்ந்து வழிபட்டு அறிவாரில்லை. ஆதியாகிய திருவருட்பயன் சிவனே என்றும், தேவர்பிரான் என்றும், தொன்மையிலேயே அமைந்த நன்மைய தென்றும் இடையறாது பாடிப் பரவிப் பணிகின்றேன். (அ. சி.) நீதி - முறைமை. நாதி: அநாதி என்றதின் முதற்குறை. (13) 2059. இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை யோரார் வருந்தேன் நுகராது வாய்புகு 1தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே. (ப. இ.) வண்டுகள் இன்புறும்பொருட்டு மிக்க தேனுள்ள மலர்களைச் சென்றணுகுகின்றன. இன்னிசைபாடி அளைகின்றன. அம் முயற்சியினால் பெருந்தேன் சேர்த்துக் கூடமைத்துத் தொகுக்கின்றன. இத் தன்மையினையும் உலகோர் உணராதிருக்கின்றனர். ஐம்புலன் நுகர்ச்சிக்கு எளிதாக வரும் நிலையிலா இன்பத்தேன்களை நுகராது நன்னெறி நான்மைவழியாக வந்து எய்தும் திருவடியின்பத்தேனைச் சிவனினைவுடன் அருந்துகின்றேன். அங்ஙனம் அருந்துகின்ற என்னை யாரும் அறிகின்றிலர். தொண்டரைத் தூயதொண்டரும் தொண்டர் முதல்வரும் அல்லவோ அறிகுவர்! ஏனைமிண்டர்கள் எங்ஙனம் அறிகுவர்? அருந்தேனை - அருந்துகின்ற என்னை. இது நம் நாயனார் தம் நிலைமொழிந்தருளும் இடங்களுள் ஒன்று. (அ. சி.) மலர் அளைந்து - பூக்களைக் கிண்டி. (14) 2060. கருத்தறி யாது கழிந்தன 2காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தனுள் ளானுல கத்துயிர்க் 3கெல்லாம் வருத்திநில் லாது வழுக்குகின் 4றாரே. (ப. இ.) உண்மைக் கருத்தினைத் திருவருள் துணையால் ஓர்த் துணராது காலங்கள் பலவூழியாகக் கழிந்தன. அருத்தியாகிய உண்மை அன்பினுள்ளான். தூமாயைச் சிவவுலக முதல்வன். அளவில்லாத உலகங்களுக்கும் அங்கங்கே வாழும் அளவிறந்த ஆருயிர்கட்கும் முதல்வனாக என்றும் ஒப்பில்லாத முழுமுதற் சிவன் ஒருவனே உள்ளான். அவன் திருவடியிணையினை எய்தி உய்திபெறுதற் பொருட்டு உடம்பினை
1. சிந்திப். அப்பர், 4. 92 - 1. " நானேயோ. 8. திருவேசறவு, 10. " தொல்லை. திருவாசகச் சிறப்புப்பாயிரம். 2. திருத்திக். அப்பர், 4. 92 - 8. " மாட்டினேன். அப்பர் 4. 78 - 3. 3. ஒன்றலா. சிவஞானபோதம், 1. 3 - 1. 4. சிலந்தியும். அப்பர், 4. 49 - 4.
|