வழிபாட்டுக் குலம் ஒன்றாக இருந்தமையால் பிணக்கின்றி அனைவரும் இணக்கமாக வாழ்ந்தனர். அதனால் 'ஒன்றே குலமும்' என்னும் இம் மறைமொழி எழுவதாயிற்று. அதுபோல் சிவபெருமானையே செந்தமிழர் முழுமுதற்றெய்வமாகக் கொண்டு வணங்கினர். அதனால் 'ஒருவனே தேவனும்' என்னும் இம் மறைமொழியும் எழுவதாயிற்று. நன்றாக நினைந்து தொழுங்கள். நமன் துன்பம் என்று சொல்லப்படும் இறப்பும் பிறப்பும் நமக்கு என்றும் இன்று. மீளா ஆளாய்ச் சிவனடிக்கீழ் நாமிருப்பதால் நாளும் அழிந்தொழியும் நிலைகட்குச் சென்று மீளும் பிறர்போல் சென்று மீளும் நிலை நமக்கில்லை. அதனால் நன்னெறி நல்லாராகிய நீவீர் நும் நல்லுள்ளத்துச் சிவபெருமான் திருவடி நின்று நிலைபெறவே நீர் நினைந்து உய்ம்மின். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று இடையறாது ஓதப்படுவது சிறந்ததொரு நன்மையாகும். அந் நன்றே நினைமின் என்பதும் ஒன்று. (அ. சி.) சென்றே......இல்லை - நாம் தேடிச்சென்று அடையும் சிவகதி இல்லை. நும் சித்தத்......பெறும் - உம்முடைய சித்தத்தின் உள்ளேயே சிவகதி தானே வந்து நிலைபெறும். (3) 2067. போற்றிசெ யந்தண் கயிலைப் பொருப்பனை நாற்றிசைக் குந்நடு வாய்கின்ற நம்பனைக் காற்றிசைக் குங்கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்றன்னைக் கூறிநின் 1றுய்மினே. (ப. இ.) அழகிய செந்தண்மை வாய்ந்த திரு வெள்ளிமலைக்கண் வாழும் சிவபெருமானை நெஞ்சமே போற்றி செய்வாயாக. நான்கு திசைகளுக்கும் நடுவிடமாகக் காணப்படும் தில்லைக்கண் மன்னிய பொன்னம்பலவாணனாம் நம்பனை, உயிர்ப்பினால் நடத்தப்படும் ஒன்பது தொளைசேர் இவ் வுடம்பினைக் கைக்கொண்டு கூற்றை உதைத்துத் தன் திருவடியைக் கொடுத்தருளும் ஏற்றூர்தியும் நீற்றுமேனியும் தோற்று பெண்பாகமும் உடைய எம்மானை இடையறாது ஏத்தி ஐந்தெழுத்தோதி உய்யுங்கள். காற்று - உயிர்ப்பு. (அ. சி.) காற்றிசைக்கும் - பிராணவாயுவினால் நடத்தப்படும். (4) 2068. இக்காய் நீங்கி யினியொரு காயத்திற் புக்குப் பிறவாமற் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று அக்கால முன்ன அருள்பெற லாகுமே2 (ப. இ.) பிறப்பினுக்கு அஞ்சிச் சிறப்பினுக்கு வழிநாடும் செந்நெறிச் செல்வர்களே! திருவருளால் இக் காயம் நீங்கியதும் இனியொரு காயமாகிய உடம்பினிற் புகுந்து பிறவாமல் திருவடிப்பேற்றிற்குச் செல்லும் செந்நெறியினை நாடுங்கள். இவ்வுடல் நமக்கு எந்தக்காலத்து
1. தந்ததுன். 8. கோயிற்றிருப்பதிகம், 10. " அந்தணாளனுள். ஆருரர், 7. 55 - 1. " பதத்தெழு. அப்பர், 4. 108 - 2. 2. மாதா. பட்டினத்துப்பிள்ளையார், திரு வி. க.
|