2102. இலையா மிடையில் எழுகின்ற காமம் உலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத் தலையாய மின்னுடல் தாங்கித் திரியுஞ் சிலையாய சித்தஞ் சிவமுன் 1னிடைக்கே. (ப. இ.) இல்லையென்றே சொல்லும்படியான மிகவும் நுணுகிய இடையினையுடைய அழகமைந்த பெண்கள்பால் கொண்ட அளப்பருங் காமத்தால் நெஞ்சம் உலைவுற்று மூழ்கித் துன்புறும் 'மற்றும் தொடர்ப்பாடெவன்கொல் பிறப்பறுக்கல், 'உற்றார்க்கு உடம்பும் மிகை' (345) என்னும் உண்மையுணர்ந்தொழுகுவார் நெஞ்சத்திண்மையராவர். அவர்கள் உள்ளத்துத் தம்முடம்பு மின்னல்போன்று நிலையாது அகலும் என்பதே தோன்றும் தம்முடலைச் சுமையெனத் தாங்கித் திரிவர். அவர்களுடைய கல்லொத்த உறுதியான எண்ணமாகிய சித்தம் சிவபெருமானிடத்தே எத்திறத்தும் அழுந்திநிற்கும். அதனால் அவர்கள் சிறப்புயிராய்ப் பிறப்பற்றுப் பேரின்பம் உறுவர். சிலை - கல்; திண்மை. சிவமுன்னிடை - சிவத்தின் திருமுன். சுமை என்னுங் குறிப்பு உடலை இரவலாகத் தந்த இறைவன்பால் ஊறின்றி ஒப்புவிக்கும் ஒரு பெருங் கடமையை உணர்த்துவதாகும். (அ. சி.) இலையாமிடை - இல்லை என்று சொல்லும்படியான சிறுத்த இடை. சிலையாய - கல்போன்ற. (3)
3. அவத்தைபேதம்(கீழாலவத்தை) 2103. ஐயைந்து மத்திமை யானது சாக்கிரங் கைகண்ட பன்னான்கிற் கண்டங் கனாவென்பர் பொய்கண் டிலாத புருட னிதயஞ்சுழுனை மெய்கண் டவனுந்தி யாகுந் 2துரியமே. (ப. இ.) மத்திமையாகிய புருவநடுவின்கண் அறிதற்கருவி ஐந்து, செய்தற்கருவி ஐந்து, வளி பத்து, அகப்புறக்கலன் நான்கு, ஆள் ஒன்று ஆகிய இருபத்தைந்து கருவிகளும் தொழிற்படும். இந்நிலை நனவு நிலையாகும். கண்டத்தின்கண் வளிபத்து, அகப்புறக்கலன் நான்கு ஆகப் பதினான்கு கருவிகளும் தொழிற்படும். இந்நிலை கனவுநிலையாகும். நெஞ்சத்தின்கண் எண்ணமும் ஆளும் என்னும் இரண்டு கருவிகள் தொழிற்படும். இந்நிலை உறக்கநிலையாகும். கொப்பூழின்கண் நிலைத்தவனாகிய ஆள் தொழிற்படும். இந்நிலை பேருறக்கநிலை. பேருறக்க நிலையெனினும் துரிய நிலையெனினும் ஒன்றே. 'பொய்கண்டிலாத புருடன்' என்பது ஏனைய புறக்கருவிகளும், அகப்புறக் கருவிகளும்போல் தொழிற்படுங்கால் தொடப்பட்டும் ஏனைக்காலங்களில் விடப்பட்டும்
1. முத்தணி. 8. திருப்பொற்சுண்ணம், 10. " ஐந்துபே 12. தடுத்தாட்கொண்டபுராணம், 106. 2. ஒன்றணையா. சிவஞானபோதம், 4. 3 - 1.
|