(ப. இ.) பூதம் ஐந்தும், பொறி ஐந்தும், குற்றம் எய்துமாறு இருந்த புறநிலைக்கருவிகள் என்ப. இவற்றால் நிகழும் குணம் செயல்கள் மலங்காரணமாகும். இவற்றை அடிப்படையாகக்கொண்டு விரிந்த கருவிகள் அறுபது, ஆகக் கருவிகள் தொண்ணூற்றாறு என்ப. கருவிகள் அறுபது வருமாறு : கூறு நிலம் : மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை ஆக 5 நீர் : நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் ஆக 5 தீ : ஊண், உறக்கம், உட்கு, உடனுறைவு, மடி ஆக 5 வளி : ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் ஆக 5 வெளி : ெவகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை ஆக 5 செய்தற்கருவி : பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல்,மகப்பெறுதல் ஆக 5 அறிவுவளி : உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று, நிரவுகாற்று ஆக 5 தொழில்வளி : தும்மற்காற்று, விழிக்காற்று,கொட்டாவிக் காற்று,இமைக்காற்று, வீங்கற்காற்று ஆக 5 நாடி : இடப்பால்நரம்பு, வலப்பால்நரம்பு, நடுநரம்பு,இடக்கண்நரம்பு, வலச்செவிநரம்பு, உள்நாக்கு நரம்பு, இடச்செவிநரம்பு, வலக்கண்நரம்பு,கருவாய்நரம்பு,எருவாய்நரம்பு ஆக 10 ஓசை : நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை,செவியோசை ஆக 4 முப்பற்று : பொருட்பற்று, புதல்வர்ப்பற்று,பொய்யுலகப் பற்று ஆக 3 முக்குணம் : அமைதி, ஆட்சி, அழுந்தல் ஆக 3 (அறுபது)60 உடனுறைவு - ஆண்பெண் சேர்க்கை. பொய்யுலகு - தோன்றி யொடுங்கும் நிலையில்லாத உலகு. (அ. சி.) ஏதம் - குற்றம். கருவி - தத்துவம். (5) 2108. இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை படுபர சேனையும் பாய்பரி ஐந்தும் உடையவன் மத்திமை யுள்ளுறு நால்வர் அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. (ப. இ.) ஆருயிர்கள் ஐம்பாடு எய்தும் இடவகைகள் ஐந்தென்ப. அவை: நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்ப. இவற்றுள் உயிர்ப்படங்கல் ஒழித்து ஒழிந்த நான்கினும் உள்ள கருவிகளை
|