847
 

உருவகமாக ஓதியருளுகின்றனர். இருபத்தைந்து கருவிகள் யானையை ஒக்கும். பேசல், நடத்தல், கொடுத்தல், கழித்தல், இன்புறலின் கருவிகள் விரைந்து செல்லும் காலாட்களாகும். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பனவற்றை மேற்கொள்ளும் கருவிகள் ஐந்தும் மிகவிரைந்து செல்லும் பாய்பரிகளாகிய குதிரைகளாகும். மிடற்றோசையுள்ளிட்ட ஓசைகள் நான்கும் அமைச்சரை ஒக்கும். இந் நான்கும் மடங்குதலே அப்பால் நிலையாகும். ஓசை நான்கு: நுண்மை, நினைவு, மிடறு, செவி என்ப.

(அ. சி.) இருபத்தஞ்சானை - இருபத்தைந்து தத்துவங்கள். படுபரசேனை - வசனாதி ஐந்து. பாய்பரி ஐந்து - சத்தாதி ஐந்து. நால்வர் - நாலு வாக்கு. அடைய - மடங்க. கடை - வாயில்.

(6)

2109. உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொ டுயிரிடை 1நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

(ப. இ.) பிறப்புக்காலந் தொட்டு ஒடுக்ககாலம் வரை மாறாதிருக்கும் நுண்ணுடல் ஓய்வின்றி வருந்தும் உடம்பாயிற்று. உடம்பும் - வருந்தும். அவ் வுடம்பு இருவினைக்கீடாக அடுத்தடுத்துப் பிறந்திருக்கும் பருவுடலைத் தழுவி இவ் விருவுடம்புகளினுள்ளும் இவற்றிற்கு வேறாக ஓர் உயிர் உண்டு. அவ் வுயிர் இவற்றைக் கருவியாகக்கொண்டு உலகியற் பற்றற்றுச் சிவபெருமான் திருவடிப் பற்றுற்றுப் பெருவாழ்வு எய்துவதற்குச் சிவபெருமான் கொடுத்தருளினன். இவ் வுண்மை உணர்வதே உடம்பொடு உயிருக்குள்ள நட்பினை உணர்தலாகும். இதனை யறியாதார் தமக்கு வேண்டிய இறைச்சி எலும்பு முதலியன என்றுமில்லாத சைவர் இருந்துவாழ் மடத்தில் புகுந்து மயங்கும் நாய்போன்று மயங்குகின்றார். மடம் - சைவர்வாழ்வீடு. இவ் வுண்மை வரும் சேக்கிழாரடிகளின் அருண்மொழியான் உணரலாம். அது வருமாறு:

"மிக்க செல்வ மனைகடொறும் விளைவு மின்பம் விளங்குவன
பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன
தக்க வணிகொண் மடங்கள்தொறும் சைவமேன்மை சாற்றுவன
தொக்க வளங்கொள் இடங்கள்தொறும் அடங்கநிதியம் தோன்றுவன."

- 12. சேரமான், 3.

(அ. சி.) உடம்பும் உடம்பு - வருந்தும்.

(7)

2110. இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள்
முருக்கு மசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடலொழி 2யாதே.


1. குடம்பை. திருக்குறள், 338.

" கட்டு. சிவஞானபோதம், 2. 1 - 1.

2. பைம்மா. அப்பர், 4. 84 - 10.