(ப. இ.) ஆருயிர்க்கு அன்பு அறிவு ஆற்றல் மூன்றும் என்றுமுள்ள உண்மையாகும். சிவபெருமான் ஆருயிர்க்கு இவற்றை விளக்குவித்தற் பொருட்டு மாயையினின்று நுண்ணுடல் பருவுடல்களைப் படைத்தளித் தருளினன். இவற்றால் வரும் பயனை அவ் வுயிர்கட்குச் சிவபெருமான் ஊட்டியருள்கின்றனன். அங்ஙனம் ஊட்டியருளுங்கால் அச் சிவபெருமான் தோன்றாத் துணையாக நின்றருள்கின்றனன். இவ்வுடல் கலன்களில் பற்றுவரச் செய்கின்றனன். பற்று - அபமானம். இவை யனைத்தும் உயிரை நன்னெறிப்படுத்த உயிர்க்குயிராகிய சிவபெருமான் செய்விக்கும் செயலென்க. எனவே ஆருயிரின் முன்மைச்செயலாகா. எனவே அடிமைச்செயலாகும் என்பது குறிப்பெச்சம். நுண்ணுடல்: கருவுருப் பிறப்புடல். பருவுடல்: கருவுறும் சிறப்புடல். (30) 2295. தொழிலிச்சை ஞானங்கள் தொல்சிவ சீவர் கழிவற்ற மாமாயை மாயையி னாகும் பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவற்ற சாந்தாதீ தன்சிவ 1னாமே. (ப. இ.) தொழில் விழைவு அறிவாகிய மூன்றும் தொன்மையாகவுள்ள பேருயிராகிய சிவபெருமானுக்கும் ஆருயிராகிய சீவர்களுக்கும் உள்ளன. சிவபெருமானுக்கு அவை மூன்றும் தாமே விளங்குவன. ஆருயிர்க்குச் சிவபெருமான் விளக்க விளங்குந்தகையன. சிவபெருமானுக்குத் தாமே விளங்குங்கால் தன்னின் வேறல்லாத் திருவருள் துணையால் விளங்கும் ஆருயிர்க்கு அவை மூன்றும் பிறப்பாகிய கட்டின்கண் திருவருள் இயைந்தியக்க மாயாகாரியக் கருவியும் ஒளியும் உறுதுணையாக கொண்டு விளங்குகின்றன. சிறப்பாகிய ஒட்டின்கண் திருவருளைக் கருவித் துணையாக் கொண்டு விளங்குகின்றன. அழிதல் இல்லாத மாமாயை மாயைகள் கருவியாக அன்பறிவு ஆற்றல்கள் நிகழ்வன. குற்றமற்ற காரணகாரியம் ஆகிய அருவநிலைப் பாழினையும் விட்டு மேலாகிய அழிதலில்லாத அப்பால் அமைதியானவன் சிவபெருமான். (அ. சி.) மாமாயை - சுத்த மாயை. மாயை - அசுத்த மாயை. சாந்தாதீதன் - ஆனந்த அதீதன். (31) 2296. இல்லதும் உள்ளதும் யாவையுந் தானாகி இல்லதும் உள்ளது மாயன்றாம் அண்ணலைச் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமென்று ஒல்லை யுணர்ந்தால் உயிர்க்குயி 2ராகுமே. (ப. இ.) நிலைபேறில்லாத காரியத்தினும், நிலைபேறுள்ள காரணத்தினும் கலப்பால் சிவன் ஒன்றாய் நின்றருள்கின்றனன். இந் நிலை அவனுக்கும் நமக்கும் தொன்றுதொட்டே உள்ளது. அம் முறையால் சிவன் யாவையும் தானாகி நிற்கின்றனன். பொருள் தன்மையில் அவன் வேறாக நின்றருள்கின்றனன். அம் முறையால் அவன் யாவையும் அல்ல
1. சீவனும். சிவஞானசித்தியார், 1. 3 - 5. 2. ஒருபொரு. " 1. 1 - 7.
|