ஒளியாய்த் தான் விளங்குவதுபோல் ஆருயிரும் ஆராய்ந்து பார்ப்பின் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும். அவ்வுண்மையினைத் தத்துவம் அசி என்னும் மும்முறை காட்டுவதாகும். சொல்லுதற்கரிதாகிய உடல்மெய் உணர்வுமெய் உணர்த்துமெய்யாகிய மூன்றும் கழிந்து நீங்குவதால் அவற்றை முப்பாழ் என ஓதப்பெறும். அம் முப்பாழின் உண்மையினையும் கண்டு சொல்லொண்ணாத பேர் என்னும் சிகரத்தைச் சொல்லுமாறு வகரம் கூட்டியுரைத்துப் பிறப்பல்லலை அறுத்துச் சிறப்புப்புல்லலை நிறுத்துக் காட்டுவது கடவுட் (2385) கையடையாளமாகும். அதுவே முத்திராந்தமென ஓதப்பெற்றது. இதுவே இறவா இன்பத் தழுந்திய அனுபூதி என்று சொல்லப்படும் இன்பியாகும். சொல்லறு பேருரைத்து என்பதற்கு அசபா காயத்திரியைத் தேனித்து என்றலும் ஒன்று. தேனித்தல் - தியானித்தல். (அ. சி.) கல்லொளி - காவிக்கல்லொளி. தட்ட - பொருந்த. சொல்லறுபேர் - அசபை. (6) 2445. உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதந் தகைந்தால் அடைந்த பயோதரி யட்டி யடைத்தவ் விடந்தரு வாசலை மேல்திற 1வீரே. (ப. இ.) உடந்த செந்தாமரை என்பது உச்சிக்குமேல் விளங்கும் ஆயிரவிதழ்த் தாமரை என்பதாகும். உடன்ற என்பது உடந்த என நின்றது. உடன்ற - பொருத; எதிர்த்த இத் தாமரை மூலத்தாமரைக்கு எதிராகலின் அங்ஙனம் ஓதினர். அத் தாமரையின் உள்ளுறு சோதியாகிய அளவிலாப் பேரறிவுப் பேரொளியை நோக்கி நடக்கும் ஓசையாகிய நாதம் மூலத் தாமரையினின்றும் அகத்தவப் பயிற்சியால் நடப்பதாகும். அவ்வோசையாகிய நாதம் பயில்வார்க்கு அருளால் கைகூடினால் ஆண்டுப் பொருந்திய அமிழ்தன்னை வெளிப்பட்டருள்வள். அவள் அன்பற்றார்க்குத் தடையாக அமைத்த வற்றா இன்ப வீட்டு வாழ்கதவினை நும்மன்பால் அவளாலேயே மேல் திறக்குமாறு செய்வீர். பயோதரி - அமிழ்தன்னை. அட்டி - தடைசெய்து, இடந்தருவாயில் - பெருவாயில், திறவீர் - திறப்பிப்பீர்: பிறவினைப் பொருளில் வந்த தன் வினை. (அ. சி.) உடந்த - எதிரில் உள்ள, ஆஞ்ஞை நடந்த - நோக்கிச் சென்ற, செந்தாமரை - மூலாதாரத்தாமரை, தகைந்தால் - வசப்பட்டால். பயோதரி - அமுதேசுவரி. (7)
15. முக்கரணம் 2446. இடனொரு மூன்றி லியைந்த வொருவன் கடனுறு மவ்வுரு வேறெனக் காணுந் திடமது போலச் சிவபர சீவர் உடனுறை பேதமும் ஒன்றென லாமே.
1. காமக். திருக்குறள், 1251.
|