மக்கள் குலமக்கள் போன்று தந்தையார் இன்னார் என வரை செய்ய முடியாமையான் தமக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்படும் செம்மையராகார் என்பது துணிபு. அம் முறையான் ஈண்டுக் கொள்ளப்படுதலுமாகும். மேலும், ஆடவரால் வெளிப்படுத்தப்படும் வித்து ஆருயிர் வித்து. அது விலை வரம்பில்லா அருமுதலாகும் அறியாமை மேலிட்டால் சில்லோர் நெல் வித்தினும் புல்லிதாக அவ் வுயிர்வித்தினை எண்ணிப் புறக்கணிக்கின்றனர். காலமும் இடமும் நோக்காது, பருவமும் மனமும் பாராது, விளைவின் விழுப்பயன் தூக்காது மருவி வீணாக்குகின்றனர். ஒருகால் அப் பொருள் விளைந்து வளர்க்கப்பட்டு வாழினும் பயன்பெறாது என்பது இருவகை வழக்கினும் பயிலப்படுவதொன்றாகும். அது கூத்திபிள்ளை ஏத்துங்கொள்ளிக்காகா என்பதாம். வித்து - விந்து. (அ. சி.) ஏற்றம் இரண்டு - இடைகலை, பிங்கலை. ஏழுதுரவு - ஆதாரமாறும் - அமுது ஊறும் சகசிர அறை. மூத்தான்-சந்திரகலை. இளையான் - சூரியகலை. படுத்த - பாய்ச்சிய. பாத்தி -- நாடிகள். பாழ்ப் பாய்ந்து - வீணாக. (8) 2834. பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோ ரேழுள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. (ப. இ.) ஆருயிர்கள் சீர்பெற்றுய்ய உடன்மெய் இருபத்து நான்கும் முழுமுதலால் படைத்தளிக்கப்பட்டன. அவற்றை ஆன்மதத்துவம் என்ப. பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள என்பதும் அவையே. உணர்வு மெய்யாகிய ஏழும் குட்டிப் பசுக்கள் என்று கூறப்பட்டன. மேலும் உணர்த்து மெய்யாகிய ஐந்தும் குட்டிப் பசுக்கள் என்றே கூறப்படும். உணர்வுமெய் - வித்தியா தத்துவம். உணர்த்துமெய்-சிவ தத்துவம். குட்டிப் பசுக்கள் அளவில்லாத பால் சொரியினும் என்பார் குடப் பால் சொரியினும் என்றனர். இவ் வொப்பால் உணர்வுமெய் உணர்த்து மெய்கள் வாயிலாக வரும் அகமுக இன்பம் அளவில்லனவாகும். அங்ஙன மிருப்பினும் ஆருயிர்கட்கு அவற்றின்கண் நாட்டமின்று. புறமுக நாட்டமே மிக்குப் பொலிகின்றது. அக் குறிப்புத் தோன்றப் 'பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்த 'தென்றனர். பனவன் - அறிவுடை ஆருயிர். (அ. சி.) இருபத்து நாலு-ஆன்மதத்துவங்கள் 24. ஏழு-வித்தியா தத்துவங்கள் 7, ஐந்து-சிவ தத்துவங்கள் 5. பனவற்கு-ஆன்மாவுக்கு. (9) 2835. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவறி யோமன்றே. (ப. இ.) ஆருயிர்கட்குப் புறமுகப் புலன் இன்பங் கொள்ளுதற்கு வாயிலாகிய உடன்மெய் இருபத்து நான்கும் ஈற்றுப் பசுக்கள் எனப்பட்டன. வற்றா ஊற்றாக வளமிகத் தரும் அறிவமிழ்திற்கு வாயிலாக
|