283
 

627. ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

(ப. இ.) அகத்தவமாம் யோகப்பயிற்சி ஏழு ஆண்டுகள் செய்யின் பெருங்காற்றினும் விரைவாகத் தங்காது அளவிலாக்கல் தொலைவு நடத்தல் கூடும். எட்டாண்டுப் பயிற்சியில் நரைதிரைகள் தோன்றா. ஒன்பதாண்டுப் பயிற்சியில் 'ஊண் உடல் வேறு செய்தான்' என்பதற்கிணங்கத் தூமாயை உடம்பாகும்.

(அ. சி.) ஏழானதில் - ஏழு ஆண்டில். எட்டில் - எட்டு ஆண்டில். ஒன்பதில் - ஒன்பது ஆண்டில்.

(8)

628. ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்1
2ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
3ஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.

(ப. இ.) பத்தாண்டுப் பயிற்சியில் திருமுறைச் சிவதீக்கை வாயிலாகத் திருநெறி நுழைவினரால் வழிபடப்பெறும் திருநீலகண்டப் பெருமானுக்கு ஒப்பாவர். பன்....சித்தி பதினோராண்டுப் பயிற்சியில் எண்பேறு பெறுவர். சீரொன்று...ராறே - பன்னிரண்டு ஆண்டுப் பயிற்சியில் சிறப்புப் பொருந்திய மேல் ஏழுலகும் கீழ் ஏழுலகும் ஆண்டான் மீநிறைவில் ஆவி வீழ் நிறைவாகும். மீநிறைவு - வியாபகம். வீழ்நிறைவு - வியாப்பியம். மிடைநிறைவு - வியாத்தி. எண் பேறு (எண் சித்தி) - 1. அணிமா. 2. மகிமா, 3. இலகிமா, 4. பிராத்தி, 5. பிராகாமியம், 6. ஈசத்துவம், 7. வசித்துவம், 8. கரிமா.

1. அணுவினும் மீதுண்மை வடிவுற்று நிற்றல் அணிமா என்னும் செல்வம்.

2. மேருவினும் மிகப்பெரிய வடிவுற்றுநிற்றல் மகிமா என்னும் செல்வம்.

3. சேறு முதலியவற்றில் இயங்கினும் அழுந்துதலின்றிக் காற்றினும் கடுநடைத்தாய் மெல்லிய வடிவுற்று நிற்றல் இலகிமா என்னும் செல்வம் (இம் மூன்றும் உடம்பால் எய்துவன).

4. மனத்தான் விழையப்பட்டன அனைத்தும் விழைந்தவாறே பெறுதல் பிராத்தி என்னும் செல்வம்.

5. எண்ணமாத்திரையான் ஆயிரம் மகளிரைப் படைத்து அவரனைவரோடும் ஆயிரம் வடிவாய் நின்று விளையாடல் பிராகாமியம் என்னும் செல்வம்.


1. ஆய. 12. உருத்திரபசுபதி, 4.

(பாடம்.) 2. நேரொன்று.

3. ஓரொன்று.