(ப. இ.) ஆருயிர்கட்கு எல்லாம் அருளிச்செய்யும் சிவனும் சிவையும் அவ் வுயிர்களின் செவ்விநோக்கித் திருவடியின்பத்தை அருளிச்செய்ய வருங்கால் வலிமைமிக்க ஐம்புலனும் அதற்கு உடந்தையாகப் பசு கரணங்களெல்லாம் பதிகரணங்களாகச் சொல்லாமலே தோன்றும். அவை அமைந்து அடங்கும்; துணையாய்விடும். சிவபெருமானும் அவ் வுயிர்களை மேன்மேலும் பெருகி யாண்டும் நீங்காது நிற்கும் அவ்வின்பத்துள் நிலைப்பித்தருள்வன். இதுவே ஆருயிர்கள் எய்தும் பேரா இயற்கைச் சிவகதிப்பேறு. இச் செயலே சிவனார் திருவிளையாட்டு. (அ. சி.) மல்லார் - வலிமையுள்ள. (12) 2023. ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித் தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் 1செய்கையே. (ப. இ.) ஆருயிர்களுக்கு அறிவை விளக்கல்வேண்டும். அவற்றைப் பண்டே புல்லிய மலத்தை நீக்கல்வேண்டும். அதற்கு இயல்பாகவே "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" ஒருவன் வேண்டும். அவனே சிவபெருமான். அழுக்கை அழுக்கால் போக்குவதன்றோ செயற்பாலது. 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் இறைவன் அடிசேர்ந்தார்'. அங்ஙனம் நீந்தினோர் நீத்தார் எனப்படுவர். மக்களைப் பிறப்பினர் இறப்பினர் சிறப்பினர் விறப்பினர் என வகுக்கலாம். பிறப்பினர் மீண்டும் பிறக்கும் வினையினர். இறப்பினர் வினையின் நீங்கினோர். சிறப்பினர் நினைவின் ஓங்கினோர். விறப்பினர் சுடச்சுடரும் பொன்போல் விளங்கிய அறிவினராய் வீறுபெற்றுயர்ந்தோர். இவருள் நீத்தார் இறப்பினராவர். நீர்வாழ் இனங்களுக்கு நீந்துதலை இயல்பாகவும் நிலத்து வந்து போதலைச் செயல்பாகவும் அமைத்துள்ளனன். அது போல் நிலத்துவாழ் இனங்களுக்கு நடத்தலை இயல்பாகவும் கடத்தலைச் செயல்பாகவும் அமைத்துள்ளனன். நம்மை யொழித்த ஏனைய உயிரினங்கட்கெல்லாம் அனைத்துச் செயல்களையும் அகத்து நின்று முனைத்துச் செய்கின்றனன். அதனால் அவை அந்நிலையில் சிவனை ஒருகாலத்தும் காணமாட்டா. நமக்கோ அகத்து முனைப்பது மட்டுமல்லாமல் புறத்தும் "ஈன்றாளுமாய் எந்தையுமாய் உடன் தோன்றினராய்" வெளிப்பட்டு முனைத்துத் துணைபுரிகின்றனன். அத்துணை எல்லாவற்றினும் வல்லவராய் நல்லவராய் வாழப் பழக்குவதே. அதனால் நம்மைக்கொண்டே நம்மைச் செம்மைப்படுத்தி அம்மை அருள்கின்றனன் சிவன். அம்முறையில் சிவன் ஆருயிர்களைத் தாழ்வான பிறவிகளில் அருளால் பிறப்பிக்கின்றனன். இருவினைப்பயனை வருவினை பெருகவூட்டுகின்றனன். அவற்றினின்றும் மீட்பிக்கின்றனன். உயர்ந்தநிலையில் அமைக்கின்றனன். திருவினையூட்டுகின்றனன். தங்கச்செய்கின்றனன். ஞானப்பிறப்பினை நல்குகின்றனன். பிறவாமையை அருள்கின்றனன். திருவடியில் நாட்டுகின்றனன். வீடுறச் செய்கின்றனன். பேசாப் பீடுற வாக்குகின்றனன். இவையே விறப்புயிர்கட்குச் சிவனார் சிறப்புச் செய்விக்கும் செய்கையாகும் இத் திருப்பாட்டின்கண் வரும் வினை
1. நீக்கி. 8. அதிசயப்பத்து, 8. துறக்குமா. சம்பந்தர், 2. 93 - 5.
|