நிலைமையோடு ஆருயிர் நிற்கும். இந் நிலையினையே துரியத்தன்நிலை என்று ஓதப்பெற்றது. (அ. சி.) பகுதி மாயை - மூலப்பிரகிருதி. துரிய அத்தன் - துரிய அவத்தையில் இருப்பவன். (22) 2169. ஈதென் றறிந்திலன் இத்தனை காலமும் ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன் ஈதென் றறியும் அறிவை அறிந்தபின் ஈதென் றறியும் இயல்புடை யோனே. (ப. இ.) பல்லூழியாக உடம்புடன் பயின்று வரும் நாம் உடம்பு நாமல்ல; அது நமக்கு வேறானது. நாம் அதனை இயக்குகின்றோம் என்னும் உண்மைகள் சில ஊழிகள் கழிந்தபின்புதான் புலனாயின. அதுபோல் நம்மை இயக்கும் பேருயிராம் சிவபெருமான் ஒருவன் உளன் என்று உணர்வதற்கும் பல ஊழிகள் கழிந்தன. அக் குறிப்பே இத்தனை காலமும் என்னை அறிவித்து இயக்கும் பேரறிவுப் பொருள் சிவபெருமான் என்று உணர்ந்திலேன் என்பதாகும். அப் பெரும்பொருள் சிவன் என்று உணர்ந்தபின் வேறு பொருள்கள் ஒன்றையும் அறிந்திலேன்; எல்லாப் பொருள்களும் அவன்கண் அடங்கிநிற்கின்றன ஆதலான். இஃது ஒருவீட்டின் மாடியின்மீது ஏறுவோன் ஏறும்போது கீழ்வீடுகள் படிகள் முதலியவற்றை விளங்கக் காண்கின்றான். ஆயின் மேல்மாடியிற் புக்கதற்பின் அவையொன்றும் அவனுக்குப் புலனாகாமை இயல்பல்லவா? அதனை யொக்கும். ஒருவன் தன்னை இயக்கும் மெய்ப்பொருள் சிவன் என அப்பொருள் தானே காட்டக் கண்டபின் அதுவென்றே அறியும் சார்பறிவுடைய இயல்பினனாவன். அறியும் அறிவு: அறிவிக்கும் அறிவு. இது பிறவினைப் பொருளில் வந்த தன்வினை. ஒருபுடை யொப்பாகக், "காணுங்காற் காணேன் தவறாய காணாக்கால், காணேன் தவறல் லவை" (1628) என்னும் திருவள்ளுவ நாயனார் திருமொழியான் உணரலாம். ஈண்டுக் காணுங்கால் என்பது சிவனைக் காணுங்கால் எனவும், தவறாய என்பது நிலையாத பிழைபாடுடைய உலகை என்பதும் பொருளாகக் கொள்க. இத் திருமந்திரத்தின்கண் நம் நாயனார் தம் முன்னிலை பின்னிலைகளை மொழிந்தருள்வாராயினர். (23) 2170. உயிர்க்குயி ராகிய வுருவா யருவாய் அயற்புணர் வாகி யறிவாய்ச் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி இயற்பின்றி யெல்லாம் இருள்மூட 2மாமே. (ப. இ.) சிவபெருமான் அனைத்துயிர்களுடனும் கலப்பால் ஒன்றாயிருக்கின்றான். அந் நிலையில் உயிர்க்கு உயிராகிய உருவாகவும் அருவாக
1. காணுங். சிவஞானபோதம், 11. " தன்ணிற். அப்பர், 5. 97 - 29. 2. சிவம்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 5. " அருளுண்டாம். சிவஞானபோதம், 5. 2 - 3. " நாகத். சம்பந்தர், 1. 85 - 9.
|