1261
 

கின்றனர். அவரிடையே சிவபெருமான் கலந்து நின்றருள்கின்றனன். ஆயினும் மெய்யன்பர்கட்கு அவர்தம் அழியா அன்பிற்கிணங்கி அவரவர் பால் மிக எளிமையனாய் எழுந்தருள்கின்றனன். அவன் பல்வேறு வகையாகக் காணப்படும் சிறிய கோரைப் புற்போன்ற மிக நுண்ணியனாய்க் கலந்தருள்கின்றனன்.

(அ. சி.) தெரிந்து உடலாய் நிற்கும் - அம் முச்சுடரையும் ஆராய்ந்து உணர உடம்பாகக்கொண்டு இருக்கின்ற. இகலிடம் எல்லாம் - மாறுபாடுடைய தேசங்கள் முற்றும். பரிந்து உடன்போகின்ற - அன்பரை விரும்பி அவரோடு போகின்ற பல் கோரை - புல்லியன்; சிறுவன்.

(4)

2986. உறுதியி னுள்வந்த வுள்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகுஞ்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுட 1ராமே.

(ப. இ.) ஆருயிர்க்கிழவர்கள் உடம்பின்மாட்டுக் கொண்டுள்ள அளவிறந்த பற்றினால் இருவினைக் குட்பட்டு உழல்வர். அவ் விருவினையும் மிக நுண்மையவாய் வந்து கூடும். கூடவே பொறுக்கலாற்றாத் துன்பம் எய்துவர். அத் துன்பத்தைப் போக்கும் புகலிடம் நாடிவிரைகுவர். அப் புகலிடம் வேறு எங்கும் இலாமையால் சிவன்பால் வந்து சார்வர். அச் சிவபெருமான் தன்னை அடைந்தார் வினை தீர்க்கும் தலைமைப் பண்பாடுடையன். அதனால், வந்தடைந்தார் வினையை வாட்டி யகற்றுவன். ஈண்டுவினை என்பது எஞ்சுவினையாகும். அதுவே எரி சேர்ந்த வித்துப் போன்றிறுவதுமாகும். அதுவே மன்னிக்கப்படுவதுமாகும். சிவர் தப்பாக எண்ணுகின்றனர், பாவம் செய்யச் செய்ய மன்னிப்பன் பரமன் என. பரமனையடைந்தார் மீண்டும் பாவஞ் செய்வரேல் யாண்டும் மன்னிப்பு எய்தார். 'இதுவே பின்னை மறத்தல் பிழை' என்பதாகும். மேலும் 'செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்னும் செந்தமிழ்ப் பொதுமறையின் செம்பொருளும் இதுவேயாம். சார்ந்தார் சிவப்பணிக்கண் சாரார் இருவினையை, நோந்தார்க்காம் எஞ்சகலல் நேர் என்பதே வாய்மையாகும். அவரைப் பொன்போற் பொலியச் செய்வன். சிறுதியாகிய ஒடுங்கிய உள்ளத்தின்கண் உள்ளொளியாக விளங்குவன். அவனே உயர்வற உயர்ந்த ஒரு பெரும் ஒண்மைக் கடவுள். 'அன்பறாது என்னெஞ்சு அவர்க்கு' எனவும், 'வீடும் வேண்டா விறலின் விளங்கினார்' எனவும் காதலர் தன்மை கட்டுரைப்பதற்கிணங்க வேறு எதன்கண்ணும் பெறுமாறுள்ள சிறு வேட்கையும் இல்லாதார் மேலோராவர். அவரே நாயன்மாராவர். அவர்க்குச் சிவபெருமான் உணர்வினுள் உணர்வாய் ஒளிரும் பெருஞ்சுடராவன்.

(அ. சி.) உறுதியினுள் - தேக அபிமானத்தால் உள்வினைப்பட்டு - இருவினையின் வசமாய். வீழ்ந்தார் - தன்னை விரும்பி வந்தடைந்தவர்க்கு இரணமதாகும் - பொன்போல் உதவுவன். இறுதியினுள் - ஒடுங்கிய


1. முன்னம். அப்பர், 4. 1 - 4.

" தன்னைச். " 4. 106 - 1.

" சார்ந்தாரைக். சிவஞானபோதம், 10. 2 - 2.

" தன்னை. " 12. 4 - 3.