931
 

னாகின்றனன். அத்தகைய விழுமிய முழுமுதல் அண்ணலைச் சொல்லால் சொல்லத் தொடங்கினால் 'சொற்கழிவு பாதமல' ராதலின் மிகவும் எட்டாத் தொலைவினனாவன் திருவருளால் அவனை உள்ளவாறுணர்ந்தால் அவன் உயிர்க்கு உயிராய் உடனாக நின்றருள்கின்றனன். இல்லது - அசத்து. உள்ளதன் மறுதலையன்று அசத்து; தோன்றி யொடுங்கும் திரிபுடையது அசத்து. ஒல்லை - ஒல்லும் வகை; உள்ளவாறு.

(அ. சி.) இல்லதும் உள்ளதும் - அசத்தும், சத்தும், சொல்லது - சொல்லினால்.

(32)

2297. உயிரிச்சை யூட்டி யுழிதருஞ் சத்தி
உயிரிச்சை வாட்டி யொழித்திடு ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுற லாலே
உயிரிச்சை வாட்டி யுயர்பதஞ் 1சேருமே.

(ப. இ.) ஆருயிர்க்கு அளவிறந்த பற்றினை உலகிடையூட்டி அலைதருமாறு செய்யும்அருள் நடப்பாற்றல். அவ் வுயிர்க்குச் செவ்வி வாய்ந்ததும் அப் பற்றினை வாட்டி ஒழித்திடுமாறு செய்யும்அருள் வனப்பாற்றல். நடப்பாற்றல் - ஆதிசத்தி; கிரியாசத்தி. வனப்பாற்றல் - பராசத்தி; ஞானசத்தி. அவ் வுயிர்க்கு வனப்பாற்றல் மெய்யுணர்வுப் பொருளாம் சிவபெருமான்பால் அன்பினையூட்டும். அச் சிவபெருமானும் ஆங்கு உடனாயுறைகின்றனன். ஆதலால் அவ் வுயிர்கள் உலகப்பற்றினை வாட்டி உயர்வற உயர்ந்த ஒரு பெரும் நிலையாம் சிவபெருமான் திருவடி நிலையினை அப்பொழுதே எய்தும்.

(அ. சி.) உயிரிச்சை - உயிருக்கு இச்சை. உழிதரும் - அலையச் செய்யும். உடனுறலால் - சிவன் உயிருடன் இருத்தலால்.

(33)

2298. சேருஞ் சிவமானார் ஐம்மலந் தீர்ந்தவர்
ஓரொன்றி லாரைம் மலவிருள் உற்றவர்
பாரின்கண் விண்ண ரகம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோரார் அவையருள் என்றன்றே.

(ப. இ.) அருளால் ஐம்மலம் தீர்ந்து தெருளுற்றவர் திருவடி சேர்ந்து சிவமானார். மெய்யுணர்வு ஒருசிறிதும் இல்லாதவர் ஐம்மல இருளுற்று மம்மர் கொண்டனர். அத்தகையோர் இருள்சேர் இருவினைப் பயனும் ஒருங்கு நுகர்தற்கு இடனாம் நிலவுலகிடைப் பிறப்பார். இருள்சேர் இருவினையுள் நல்வினைப்பயனைத் துய்த்தற்கு விண்ணிடைச் சேர்வர். தீவினைப்பயனைத் துய்த்தற்கு நரகிடைச் சேர்வர். இவையே அவர்தம் பான்மை ஆகும். இவற்றைக் கண்டும் கேட்டும் இவையனைத்தும் திருவருளியக்க இயங்குகின்றன என்னும் மெய்ம்மையை ஒருசிறிதும் உணரார் உண்மையறிவில்லார்.

(அ. சி.) ஓர் ஒன்றிலார் - தத்துவ ஞானம் இல்லாதவர்.

(34)


1. மருத்துவ. சிவஞானசித்தியார், 2. 2 - 31.

" ஏகமாய். சிவஞானபோதம், 11. 1 - 2.