(ப. இ.) கேசரியோகப் பயிற்சியால் வெறுக்கத் தகுந்த உடம்பினை விரும்பத் தகுந்த கரும்புபோல். ஆக்கிக்கொண்டவர். பூவரும்புபோன்ற நாவின் நுனியை மேனோக்கிக் குவித்துச் செலுத்திப் பாம்பின் தலை போன்று காணப்படும் கோங்கரும்பை ஒத்த குண்டலியின் வளைவை நேராக்கினால், உடல் கரும்புபோன்று இனிமையுடையதாய் மதிமண்டலத் தமிழ்தும் நுகரவரும். கோணை - வளைவை. ஊனீர் - உடலமிழ்து. (அ. சி.) கோங்கு அரும்பு - பாம்பின் தலை, குண்டலி. (10) 789. ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே. (ப. இ.) மதிமண்டலத் தமிழ்தாகிய ஊனீர் வழியாக உண்ணாக்கை மேற்செலுத்திப் பின்தோன்றுந் திருவருளின்பினைத் துய்த்து 'சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருமறை ஐந்தினையும் இடையறாது கணித்தால் உச்சித்தொளை அமிழ்தமாகிய பேரின்பம் வருவழியை திருவருள் அமைத்தருளும். இதுவே பரவெளிப் பேரின்பம் வரும் வழி என்று அறிந்து கொள்வீராக. (அ. சி.) ஊனீர் - அமுதம். கான் - மேல்வீடு. கங்கை - இடகலை. (11) 790. வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும் பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே. (ப. இ.) முற்கூறிய முறைப்படி அமைந்துணர்ந்து அகவழிபாடு செய்தவர்க்குச் சிவபெருமான் அவர்களுடைய கார் அறிவாம் அறியாமையை எரிப்பர். அவ் வுயிர் திருவடியுணர்வில் அடங்கி அவ்வுணர்வாகவே நிற்கும்படி திருவருள் புரிவர். அத் திருவடி யுணர்வுப் பரப்பில் நிறைந்து, சிவனை உணர்ந்து கேசரியோக அடையாளமாகிய தடையினை அமைத்து அதனால் மலமகன்று, திருவடியை ஓவாது உணர்ந்தாருள்ளம் சிவனுறை திருக்கோயிலுமாகும். (அ. சி.) காய்ந்து - அஞ்ஞானத்தை எரித்து. படிக்கதவு - கேசரி முத்திரையாகத் தடை. கூய்ந்து - நிர்மலமாகி. (12) 791. கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந் தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே.1 (ப. இ.) உள்ளக்கோயிலினுள்ளே சிவபெருமான் குடியிருந்து வாழ்வர். எல்லாவுலகங்களுக்கும் திருவருள் செய்வதில் தாயினும் நல்லவராவர். நோய்க்கு மருந்துபோல், தீவினையாளர் தம் தீவினையைத்
1. பால்நினைந். 8. பிடித்தபத்து, 9.
|