852
 

சென்று ஓசையுடன் மூலத்திடத்து ஊமனாகிய ஆருயிர் குறைவுடைத்தாகிய அறியாமைப் பண்பைச் செய்யும் மூலப் பகுதியின் செயலையும் விட்டு அம் மூலப்பகுதியுடன் மட்டும் தனித்து நிற்கும். ஆருயிர்: உயிர்ப்பு; பிராணவாயு.

(அ. சி.) வானத்து - உள்ளத்தினால். கருத்தின் தலை - மூலாதாரம். ஊமன் - ஆன்மா.

(16)

2119. ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை யகத்தினில் அஞ்சும் 1அடங்கிடும்
ஓமய முற்றது வுள்ளொளி பெற்றது
நாமய மற்றது நாமறி யோமே.

(ப. இ.) ஊமை எழுத்தென்பது பேசா எழுத்து. அஃதாவது 'ம்'. மெய்யெழுத்துக்கள் உயிரைச் சார்ந்தன்றி ஒலியா. அதனால் அவை ஊமை எழுத்தெனப்படும். இம் மகாரம் ஓமொழியின்கண்ணுள்ளது. பேசும் எழுத்து அகர உகரங்கள். இந்த அகர உகரங்கள் மகரத்தொடு பொருந்தில் 'ஓம்' என்று ஆகும். இவற்றுள் அ ஆற்றலையும் உ அறிவையும் குறிக்கும். ஆற்றல் - சத்தி. அறிவு - சிவம். ஆமையானது தனக்கு இடர் நேருங்கால் காலிரண்டு கையிரண்டு முகமொன்று ஆகிய ஐந்துறுப்புக்களையும் உள்ளடக்கிக் கொள்ளும். ஏனைய நேரத்து வெளிப்படுத்தி நல்லனபுரியும். அதுபோல் ஆருயிரும், இவ் ஓமொழிச் சிறப்பால் ஐந்துறுப்பையும் தீமைக்கண் அடக்கி நன்றின்பால் உய்த்து நலம்புரியும். அக் காலத்து அவ் வுயிர் ஓமொழி வயமாக நிற்பதால் தன்னறிவாகிய சிற்றறிவு அகன்று நிற்கும். இதுவே நாமயமற்ற நன்னிலையாகும். நாம் மயம்: நாம் என்னும் தன்மை. இப் பொருளே பயக்கும் குறிப்புத் 'தன்நாமங் கெட்டாள்' என்னும் திருமறைத் திருப்பாட்டின் கண்ணும் காணலாம். 'ஊமை எழுத்தென்பதை ஓங்கார வடிவமாகிய பஞ்சமை வாக்கெனவும், பேசுமெழுத்து வைகரிவாக்கு எனவும்' கொண்டு அதற்கியையப்பொருள் கூறுவாரும் உளர்.

(அ. சி.) ஊமை எழுத்து - ம் (மலம்). பேசும் எழுத்து - அ, உ (சத்தி சிவம்). ஆமை - ஆமையின் ஐந்து உறுப்புகள் அடங்குதல்போல. ஓமயம் - ஓம் மயம். நாமயம் - தற்போதம்.

(17)

2120. துரிய மிருப்பதுஞ் சாக்கிரத் துள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரிய மிறந்திடஞ் சொல்லவொண் ணாதே.

(ப. இ.) பேருறக்கமாகிய துரியமிருப்பது நனவாகிய சாக்கிரத் துள்ளேயாம். நரிகள் என்று சொல்லப்படும் அறிதற்கருவி ஐந்தும், செய்தற்கருவி ஐந்தும், அகக்கலன்கள் நான்கும் கூடிப் பதினான்கென்ப. இக் கருவிகள் பதினான்கும் ஆருயிர் புறத்துப் பரவாமையான் நுகர்ச்சியின்றி நஞ்சுண்டது ஒத்து அடங்கின. அப் பொறிகள் புலன்கொள்ளும் புலன்கள் பத்தும் குதிரையை ஒத்துத் தொடர்வின்றிப் பறந்தது.


1. ஒருமையுள். திருக்குறள், 126.