939
 

(ப. இ.) ஈண்டுக் குறிக்கப்படும் உடம்பகத்து வாழும் உயிராகிய தம்மை அறியமாட்டாதவர்கள் குறிக்கொண்டு ஆட்கொள்ளும் சிவபெருமானாகிய குறியினை அவனருளாலே காணமாட்டார்கள். தம்மையும் தலைவனையும் அறியும் தவப்பேறு இல்லாதவர், கடமாகிய உடம்பில் மிகுதியும் கூடிப் பிறப்பர். திருவடிக் கலப்பினால் தம்மையறியா வகையாக இன்பில் திளைத்து திருவடியில் கூடுங்கள். கூடினால் அன்னமாகிய சிவபெருமானை அறிந்து வேறொன்றும் அறிதல் செல்லாது. நாளும் சிவமாம் நிலைஎய்தி இன்புறுநிலையில் இந்நாள்காறும் அறிவிறந்து நின்ற சிவத்துடன் கூடி யின்புறுவர்.

(அ. சி.) கடம் - உடம்பு. குறி - உயிர். குறிகாண - சிவத்தைக் காண. அன்னம் - சிவம்.

(49)

2314. ஊனோ வுயிரோ வுறகின்ற தேதின்பம்
வானோர் தலைவி மயக்கத் துறநிற்கத்
தானோ பெரிதறி வோமென்னு மானுடர்
தானே பிறப்போ டிறப்பறி யாரன்றே.

(ப. இ.) உடம்புடன் கூடி வாழும் உயிர்கள் ஏதோ இன்பம் அடைகின்றதாகக் கூறுகின்றனர். உண்மையில் அவ்வாறு அடையும் இன்பமொன்று உண்டா? உண்டாயின் அவ் வின்பத்தினையடைவது உயிரா? உடம்பா? வானவர்களாலும் ஓர்த்து உணர ஒண்ணாப் பெருநிலையின்கண் உள்ளவள் வனப்பாற்றலாகிய பேரறிவுப் பெருந்திரு. அத்தகைய வனப்பாற்றலாம் வண்மைத் திருவின் கலப்பினால் உண்மை உணர்வு தோன்றும். அத் தோற்றத்தின் வழியே அழுந்த நிற்பவாகிய பணிகளைப் பிணியில்லாமல் புரிவாயாக. தாமாகவே மிகுதியும் அறிவோமென்று பிழைபடச் சொல்லும் மானிடர் தானே எய்தும் பிறப்பு இறப்பினை மாற்றும் இயல்பறியாதவராவர். வானோர் தலைவி - பராசத்தி. மயக்கத்து - வசத்து. உறநிற்க - பிறழாது நிற்க.

(50)


4. அறிவுதயம்

2315. தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை யறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் 1தானே.

(ப. இ.) திருவருளால் தனக்குத் தலைவனாகிய சிவபெருமானை அறியத் தன்னை அறியும் ஆவியாகிய தனக்கு எஞ்ஞான்றும் பிறப்பு இறப்புக்களாகிய கெடுதல் உண்டாகமாட்டாது. அங்ஙனம் தனக்குரிய தலைவனையறியாது தானாகவே பிறந்து இறந்து துன்புறும் தீவினைகளைச் செய்து கெடுகின்றான். தன் தலைவனையறியும் தனியறிவை அறிந்தபின்


1.என்னை. அப்பர், 5. 91 - 8.