1045
 

திருவடியைப் போற்றுவர். பொருள்: என்றும் பொன்றாதுநின்று நிலவும் மெய்ம்மை. தாமே: ஈற்றசை; எளிதாக இனிதாக என்றலும் ஒன்று.

(அ. சி.) அமரில் - இருந்தால்.

(4)

2554. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந் தூழித் தலைவனு மாய்நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைந்திடும் 1மெய்யர்க்கே.

(ப. இ.) சிவபெருமான்மாட்டுக் கரவின்றிப் பேரன்பினை மெய்யாகப் பூண்டவர் மெய் கலந்தாராவர். அச் சிவபெருமானும் அவர்களுடன் மெய்யாகக் கலந்து வெளிப்பட்டு வேண்டும். அருள்புரிந்தருள்வன். கரவாடும் வன்னெஞ்சினராய் நிலையாத உலகியற்பொருள்களை நிலைக்கும் எனப் பாழேகழிப்பவர் பொய்ப்பொருளுடன் கலந்த பொய்யராவர். அவர்முன் புகுதவும் கூசுவன் சிவன். அவன் 'பொக்க மிக்கவர் பூவும் நீருங்கண்டு நக்குநிற்கும்' நடுநிலையின் - அதனால் கூசுகின்றனன். அச் சிவன் ஆருயிர்கள் உய்தற்பொருட்டு அவற்றுடன் கலந்து பேரொடுக்கப் பெருமுதல்வனாய் நிற்கின்றனன். மெய்யடியார்களாய் விளங்குகின்றவர்கட்கு அவர்தம் மெய்யன்பில் மெய்யாகக் கலந்து மாளாவின்பம் விளைந்திடச் செய்வன்.

(அ. சி.) மெய் - வாய்மை. உய் கலந்து - ஆன்மாக்கள் உய்யுமாறு கலந்து.

(5)

2555. மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற 2லாமன்றே.

(ப. இ.) மெய்ம்மையன்பினருடன் மிகவும் மெய்கலந்து விளங்குபவன் சிவன். பொய்க்கலப்புடையர்பால் ஒருசிறிதும் புகுதல் செய்யாத ஒப்பில் ஒருவனாம் தூயோனை இடையறாது நினையுங்கள். அப் பயிற்சி மிகுதியால் ஆவி உடம்பினைவிட்டு நீங்கி வெளிமேவுங்காலை அண்ணலாகிய சிவபெருமானைப் பண்ணமை திருவைந்தெழுத்தால் பரவி அவன் திருவடியிற்கலத்தல் செய்யுங்கள். அங்ஙனம் கலப்பாரே அவன் திருவடிக்கருத்தினை எய்தினோராவர். வாய்மைச் சிறப்பினை இதன்கண் காண்க.

(6)

2556. எய்திய காலத் 3திருபொழு துஞ்சிவன்
மெய்ச்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி யாகிநின் றானன்றே.


1. செய்யர். அப்பர், 4. 16 - 1.

2. நெஞ்சம். " 5. 27 - 3.

" மனிதர்காள். " " 91 - 7.

3. காலமுண். 8. திருப்பாண்டிப்பதிகம், 5.

" வேண்டினுண். திருக்குறள், 342.