(அ. சி.) ஆமாக்கள் ஐந்து-பஞ்சப் பிராணன். அஃதாவது அபானன், உதானன், சமானன், பிராணன், வியானன். அரியேறு - ஆண்சிங்கத்தின் தன்மை வாய்ந்த முப்பது-மூன்று+பத்து. ie. கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5 ஆக 10. புத்தி, சித்தம், அகங்காரம் 3. தேமா இரண்டு - சுகம், துக்கம். திப்பிலி ஒன்பது- நினைத்தல், படித்தல், புகழ்தல், தொண்டு செய்தல், அருச்சனை, நட்டல், வந்தித்தல், பார்த்து ஆனந்தித்தல், தற்போதம் இழத்தல் ஆக 9. தாமா - தமக்கு உரியனவாக குரங்கொளின்-வசப்படுமாயின். மனத்துள்ளன - மனத்துள்ள காமக் குரோத ஆதிகள். மூவா-வளர்ச்சி அடையா. கடாவிடின் - வைராக்கியம் வளர்ச்சி அடைதலின். மூட்டுகின்றார் - காமாதிகளைக் கொடுக்கின்றார். (19) 2845. எழுதாத புத்தகத் தேட்டின் பொருளைத் தெருளத கன்னி தெளிந்திருந்த தோத மலராக பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட 1வாறே. (ப. இ.) அருளோன் ஆகிய சதாசிவநாயனார் செவ்வி வாய்ந்த நல்லார் உள்ளத்து வெளிப்பட்டு நின்று நெறி நூலாகிய மறையினையும், துறை நூலாகிய முறையினையும் உணர்வு அளவான் எழுப்பியருள்வன், பின்னர் அந்நல்லார் நூல்வடிவாக ஆக்கியருள்வர். அதனால் மறைகள் எழுதாக்கிளவி என்றழைக்கப்படுகின்றன. அவ்வெழுதாத உள்ளுணர் புத்தக ஏட்டின் (1043) பொருளைத் திருவருளின் அறிவாற்றற் பெருந்திரு தெளிந்திருந்து ஒதினள். அவள் தானே தெளிந்து கொண்டது அன்றி ஒருவர் தேளிவிக்கத் தெளிந்தாளல்லள். பிறப்பு இறப்பு இல்லாத பெருமானென்பார் மலராத பூ என்றனர். மலர்தல் என்னும் சொல்லே முன் மலராமையையும், பின் வாடுதலையும் குறிக்கும். மேலும் மலர்தல் என்பது துணைக் காரணங்கள் கூடிய வழிச் செயற்கையான் மலர்வது என்றாகும். ஆகவே இயற்கை இறைவன் என்பதனைக் குறிப்பதற்கு இயற்கைப் பூவே குறித்தல்வேண்டும். அதனால் செயற்கையான் மலராத மலர் என்றனர். அளவிடப்படாத அம் மலராகிய இறைவன் திருவடிக்கண் உள்ள எல்லையில்லாத நல்ல மணமாகிய தேனைத் திருவருளா லுண்ணும் தொன்மைக்கணுள்ள ஆருயிர் பிறவாத வண்டு என உருவகிக்கப்பட்டது. அவ் வண்டு திருவடிப் பெருந்தேன். இன்பத்தினை உணர்விலழுந்தி ஒப்பில் இன்பம் எய்துகின்றது. (அ. சி.) எழுதாத புத்தகத்து எட்டின் பொருளை - சதாசிவ நாயனாரைத் தவிர வேறு எவராலும் எழுதப்படாத புத்தகத்தால் (மயிலிறகால்) தாழை மடலில் (ஏடு) வர்ணத்தைக் குழைத்து எழுதப்பட்ட தமிழ் வேதப்பொருளை தெருளாத - இருதுவென்பதே இல்லாத கன்னி - மனோன்மணி (மனோன்மனி கையில்தான் வேதபுத்தகம்
1.ஒழுகலரி. சம்பந்தர், 3. 67 - 12. " மனமுலா." 1. 76 - 4. " தெய்வச்சுருதி. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், 60. " துணையி. அப்பர், 5. 15 - 4. " வினையின் நீங்கி. தொல்.பொருள், 649.
|