பெருமானாக எழுந்தருளிவந்து காட்சி தந்தருளினன். அவமாகிய பற்று அற்ற பெருமானும் அவனே. அதனால் அவன் பற்றற்றான் என்று பரவப்படுகின்றனன். அவனே அடியேனை ஆளுடைய நாதன். உண்மைப் பெருமானாய் உலக முழுமுதல்வனாய் என்றும் பொன்றாதுநின்று நன்றருளும் நம்பனை 'நமசிவய' என நற்றமிழால் பற்பல்காலம் வாழ்த்திப் பணிந்து நின்றேன். (14) 2931. பணிந்துநின் றேன்பர மாதி பதியைத் துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன் அணிந்துநின் றேனுடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் 1டேனே. (ப. இ.) யாவர்க்கும் எவைக்கும் யாண்டும் மேலாகவும் முழுமுதற் காரணமாகவும் விளங்கும் சிவபெருமானைத் திருஅருளால் பணிந்து நின்றேன். 'பணிதல் எல்லார்க்கும் நன்றாம்' என்னும் பண்பினை மறவாது துணிந்து பணிந்து நின்றேன். அச் சிவபெருமான் புகலே மாறாப் புகலெனத் துணிந்து நின்றேன். அதனால் இனி மற்றொன்றும் வேண்டேன். உடலாகிய உள்ளத்தின்கண் அவனை அணியாக அணிந்து சேர்ந்து நின்றேன். ஆதிப்பிரான் அடியிணைக்கீழ் அடங்கினமையால் எல்லா அல்லலும்போய் அமைதிபெற்று நின்றேன். சிவனே விழுமிய முழுமுதல் என்றும், இறப்புப் பிறப்பில்லா இறைவனென்றும், எட்டுவான் குணத்து எம்மான் என்றும், பிழைபொறுக்கும் விழைதகு பெரியோனென்றும், ஆருயிர்கட்கு இறவா இன்பப் பெருவாழ்வாம் சிறப்பருளும் செம்பொருளென்றும், இயற்கை உண்மை அறிவு இன்பப் பண்ணவனென்றும், இயற்கை அன்பு அறிவு ஆற்றல்சேர் 'வினையினீங்கி விளங்கிய அறிவுசேர் முனைவன்' என்றும், ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் என்றும், பொன்றா இனியன் என்றும், 'போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணிய' னென்றும், ஐந்தொழில் அருளால் புரியும் மைந்துசேர் மன்றவாணனென்றும், 'சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்' என்றும், செம்பொருட்டுணிவினர்தம் சீருடைநெஞ்சகம் அகலா ஏருடை ஏறோனென்றும், 'பொக்கமிலாதவர் நெஞ்சில் புக்குநிற்கும் பொன்னார் சடைப்புண்ணிய' முக்கணனென்றும், 'தென்னா டுடைய சிவனே போற்றி' எனவும் 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனவும் இயம்பப்படும் இயவுள் என்றும், 'கல்லார் நெஞ்சில் நில்லாக் கடவு'ளென்றும், இவை முதலாகிய பிறவும் பெம்மான் சிவன் தன்மைகளை விளக்கும் செந்தமிழ் மறைமொழிகளை அவனருளால் கண்டுகொண்டேன். "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்னும் அப்பர் அருளிய செந்தமிழ்ச் செழுமறையும் காண்க. (15) 2932. என்னெஞ்சம் ஈசன் இணையடி தாஞ்சேர்ந்து முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறுந் தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னஞ்செய் தென்னைப் பிணக்கறுத் 2தானன்றே.
1. வேண்டேன். 8. உயிருண்ணிப் பத்து, 7. " பூவினுக். அப்பர், 4. 411 - 2. 2. நன்னெஞ்சே. சம்பந்தர், 2. 40 - 3.
|