786
 

என்னும் அப்பர் பெருமான் அருளிய ஒப்பில் பொருள் மறையான் உணர்க. அரன்நாமம் - 'நவசிவய'

(அ. சி.) தொண்ணூற்றறுவர் - 96 புறத் தத்துவங்கள். ஐந்தரு - அஞ்சு விடயங்கள். ஐவர்க்கு இறை - மனம்.

(5)

1990. சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை 1நாடொறுஞ்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்மையுங்
கொல்லநின் றோடுங் குதிரையொத் 1தேனே.

(ப. இ.) திருவருள் நலத்தால் ஒவ்வொருநாளும் இயற்கை உண்மை அறிவு இன்பப் பெருஞ்சுடராகிய சிவபெருமானைத் திருமுறை வழியாகப் பொருள்சேர் புகழ் புகன்று இருள் நீங்கி அருள்தாங்கித் தொழுககில்லேன். 'குவளைக் கண்ணி கூறன் காண்க' எனத் தொழுவார் கண்முன் 'அவளும் தானும் உடனே காண்க' என்னும் மெய்ம்மையால் அருளாற்றலாகிய திருமங்கையும் அங்குத் தோன்றியருள்வள். அதனால் அவளும் அங்குளள் என ஓதப்பெற்றனள். அவளையும் அதுபோல் தொழும் ஆற்றல்பெற்றேன் அல்லேன். அதனால் ஐம்புலன்களையும் அவற்றுடன் விட்டுப் பிரிவின்றி ஒட்டிச்செல்லும் மனத்தையும் வெல்லும் ஆற்றல் பெற்றிலேன். அதனால் தன்மேல் ஊர்வாரைப் போர்முனையில் வீழ்த்தி இறப்புத் துன்பத்தை எய்துவிக்க நினைக்கும் போர் முறை கல்லாப் பொல்லா. மாவைச் சார்ந்தாரை ஒத்துளேன்.

(அ. சி.) திருமங்கை - அருட்சத்தி. தன்னை - மனத்தை.

(6)

1991. எண்ணிலி யில்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி யில்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி யில்லியோ டேகாமை காக்குமேல்
எண்ணிலி யில்லதோர் இன்பம் 2தாகுமே.

(ப. இ.) விளக்கமாகத் தெரியும் ஒன்பது தொளைகளேயன்றி மயிர்க்கால்கள் அனைத்தும் தனித்தனிக் கட்புலனாகா நுண்தொளைகள் ஆகும். அதனால் இவ் வுடல் அளவிடமுடியாத தொளைகளையுடையதாகும். அம்மட்டுமன்று; எளிதிற் போக்கமுடியாத ஆணவவல்லிருள் நிறைந்த பாழறையுமாகும். ஆங்குக் காணப்படும் அளவிலாத் தொளைகள் வழி ஐவரும் மனமும் அடுத்தடுத்துச் செல்லுவாராயின் பிறப்பு இறப்புக்கு உட்படும் துன்பமாகிய பிழையினையே தருவர். திருவருளால் மனத்தினை அடக்கி ஐம்புலனையும் திருவடித்தொண்டில் ஈடுபடுத்துதல் வேண்டும். அங்ஙனம் ஈடுபடுத்தினால் அவை அத்தொளைகள்வழி வீணாகப் புறஞ்செல மாட்டா. அம் முறையொன்றே


1. வென்றிலேன், அப்பர், 4. 78 - 1.

" அமரகத்து, திருக்குறள், 814.

2. செங்கணவன்பால், 8. திருவெம்பாவை, 17.

" எண்ணுகேன். அப்பர், 6. 99 - 1.