(ப. இ.) ஆருயிர்க்கு அறிவு விளங்குதற்பொருட்டு ஆண்டவன் முதற்கண் படைத்து விட்டுநீங்காது ஒட்டியுறுமாறு அமைத்த உணர்வு மெய்ஊ முதல் ஏழாகும். அவை ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, உழைப்பது, உழல்வு (2411) என்பன. இவை முறையே காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் கூறுப. இவற்றால் வரும் சுட்டுணர்வும் சிற்றுணர்வும் அடங்கும். இவை ஒடுங்கும். இவையே தத்துவம் கெடுதல் என்பதாகும். இம் மெய்கெட எஞ்சிய தூமாயையும் மூலப் பகுதி மாயையும் வேறாகும். பொருட்டும் பின் முளையாவாறும் வேரறுத்தல் வேண்டும். திருவருளால் வேரறுக்கவே யாவர்க்கும் யாவைக்கும் மேலாய் விளங்கும் உச்ச பரசிவனாம் பெரும்பொருள் வெளிப்படும். வெளிப்டலும் ஆருயிர் அவ்வுண்மைப் பொருளுடன் கலந்து இன்புறும். அச் சிவபெருமான். பிறப்பு இறப்பு ஆகிய அச்சத்தை நீக்கியருள்வன். அச்ச நீக்கி நந்தி ஆண்டருள்புரிந்தனன். உழைப்பது - ஆள். உழல்வு - மருள்; தூவாமாயை. (5) 2418. என்னை யறிய இசைவித்த என்னந்தி என்னை யறிந்தறி யாத விடத்துய்த்துப் பின்னை யொளியிற் சொரூபம் புறப்பட்டுத் தன்னை யளித்தனன் தற்பர 1மாகவே. (ப. இ.) என்னை அறியும் இயல்பு எனக்கு இல்லாத ஆணவப் பிணிப்போடு மட்டும் இருந்த நிலையில் சிவபெருமான் மாயாகாரிய உடம்பினை உள்ளதாகிய மாயையினின்று உள்ளுமளவால் படைத்தளித்தருளினன். அதனால் என்னை யறியுமாறு என்னை அவ்வுடம்புடன் இசைவித்தருளினன் நந்தி. அருளால் என்னை யான் அறிந்ததும் உலகியற் பொருள்கள் ஏதும் அறிந்திலன். அவனே அத்தகைய அறிவுப் பெருவெளியின்கண் என்னைச் செலுத்தினன். பல்வேறு அறைகளையும் படிகளையும் கடந்து மேன்மாடத்தேறி நிலா முற்றத்துற்றவன் தான் இதுகாறும் தங்கியும் கிடந்தும் நடந்தும் கடந்தும் வந்த இடங்களொன்றையும் அறியாது நிலாமுற்றத்து வான்வெளி மட்டும் உணர்ந்து கொண்டிருப்பது இதற்கு ஒப்பாகும். அதன்பின் வெளிப்படும் திருவருள் ஒளியில் இயற்கை உண்மை அறிவின்ப வடிவம் தோன்றும். அந்நிலைக்கண் தன்னை யளித்தருள்வன். அவனே தற்பரமாகிய முழுமுதற் சிவபெருமானாவன். ஆருயிர் தானாம் வண்ணமாவதற்கு இங்ஙனம் அருள்புரிகின்றனன். (அ. சி.) சொரூபம்-ஆன்ம உருவம். (6) 2419. பரந்துஞ் சுருங்கியும் பார்புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரனெறி யாயது வாகித் தரந்த விசும்பொன்று தாங்கிநின் 2றானே.
1. காணும். சிவஞானபோதம், 11. " காயமொழிந். சிவஞானசித்தியார், 11. " காணுங்காற். திருக்குறள், 1286. 2. கடவு. அப்பர், 5. 3 - 1.
|