1259
 

22. சர்வ வியாபி
(பெரு நிறைவி)

2982. ஏயுஞ் சிவபோக மீதன்றி யோரொளி
ஆயும் அறிவையும் ஆயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனதெய்துஞ்
சாயுந் தனது வியாபகந் தானன்றே.

(ப. இ.) நன்னெறி நான்மை நற்றவப்பேற்றால் சிவக்களிப்பாகிய சிவபோகம் பொருந்தும். அதுவல்லாமலும் திருவருட் பேரொளியால் ஆயும் அறிவு உண்டாகும். நிலைப்பதும் நிலையாததுமாகிய பொருள்களின் வேறுபாடுகளை அறியும் அறிவே ஆயும் அறிவெனப்பட்டது. இவற்றை உள்ளவாறு ஆராயவொட்டாது தடைசெய்து நிற்கும் அறியாமையால் பொருள்களில் பசை யென்னும் பரிவுண்டாகும். பசை - வாசனா மலம். அதனால் பருவுடல் உண்டாகும். பரியபுரி - பருவுடல். அவ் வுடம்பையும் அருந்தவப் பேற்றால் தன் வயமாக்கும் தன்மையுண்டாகும். சிவபெருமானின் அகல் நிறைவுள் ஆருயிர்கள் அமை நிறைவாக அடங்கியிருக்கும். அதனால் அவ் வுயிர்களின் முனைப்புச் சாய்ந்து கெடும். நிறைவு - வியாபகம். அவை மூன்றுவகைப்படும். 1. அகல் நிறைவு. 2. அமை நிறைவு. 3. அடங்கு நிறைவு. இவற்றை முறையே வியாபகம், வியாப்பியம், வியாத்தி எனவும் வழங்குப.

(அ. சி.) ஏயும் சிவபோகம் - சிவானந்தம் உண்டாம். ஆயும் அறிவு - ஆராய்ச்சி அறிவு. ஆயாவுபாதி - அவிச்சை. பரியபுரி - பூரித்துள்ள உடம்பு. தனதெய்தும் - தன் வசமாக அடையும். சாயும் - கெடும்.

(1)

2983. நானறிந் தப்பொருள் நாடவிட மில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட 1லாகுமே.

(ப. இ.) அடியேனுடைய சுட்டறிவினாலேனும் சிற்றறிவினாலேனும் அச் சிவபெருமானை, நாடியறிவதற்குரிய இடமில்லை. வானாகிய திருவடியுணர்வு கை வந்த மேலோர் அவனருளாலே அவன்தாள் வணங்கும் பேரன்பு வாய்ந்த சீர்மிகு நாயன்மாராவர். அவர்வழியே சென்று நாமும் தொழுதல் வேண்டும். அப்பொழுது அச் சிவபெருமான் விளங்கி வெளிப்படுவன். வான்: ஆகுபெயர், நாயன்மார். விம்மிடும் - விளங்கி வெளிப்படும். அருளால் உயிர் அறிந்து உய்யுமாறு நின்று ஒளிரும் ஒண்சுடர் அச் சிவன். அவ் வுண்மை கைவரப் பெற்றால் 'தமியேன் உளம் புகுதல் யானே யுலகென்பன் இன்று' என்பதற்கிணங்க அவ் வுயிர் எங்கணும் செறிவாய் நிற்கும். பாலுட் கரந்த தேனும், சோறுட் கரந்த நெய்யும் முறையே அப் பால் முழுவதினும் நிறைந்தும், அச் சோறு முழுவதினும் நிறைந்தும் விளங்குவன இதற்கு ஒப்பாகும்.


1. ஞானத். அப்பர், 5. 91 - 3.

" அரக்கொடு. சிவஞானபோதம், 2. 1 - 4.