202
 

அறிதற் கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து ஆகப் பத்தினுடன் கூடிய மழையாகப் பொழியும் நீர்முதலாகச் சொல்லப்படும் பூதங்கள் ஐந்தும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும் கூடின. புருவ நடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடையறாது நிகழ்வதாயிற்று. அறிதற் கருவி; செவி, மெய், கண், நாக்கு, மூக்கு. செய்தற் கருவி; வாய், கால், கை, எருவாய், கருவாய், கரணம்; எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு. அறிவு நிகழ்தற்கு நிலைக்களம் புருவநடுவும் உச்சியும் என்ப.

(5)

441. பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.

(ப. இ.) பூவினகத்துத் தங்கியிருக்கும் நறுமணத்தை ஓவாது சுழலும் காற்று வெளிப்படுத்தி உலகத்தில் கொண்டுவந்து பரப்பி நிலைப்பிக்கும். அதுபோல் அருவுடம்புடன் கருவிற் கூடிய ஆருயிரை அங்குப் பொருந்திய காற்றுக்கள் பத்தினுள் சிறிது சிறிதாக வளர்ந்து பெருகும் மென்மையமைந்த உயிர்க்காற்று பிறக்கும் குறிப்பு ஏற்பட்டதும் உடனொத்துப் பொருந்தி வெளிக்கொணரும்.

இதற்கு உயிர் பிரியுங்காலத்துத் தொழிற்காற்று என்று கூறுவாருமுளர். கருவுற்பத்தி நிலைக்களத்து அங்ஙனம் கூறுதல் பொருந்தாதென்க.

(அ. சி.) நீள் வாயு - தனஞ்சயன். கூவி அவிழும் - இரைந்து கொண்டு செல்லும்.

(6)

442. ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.

(ப. இ.) சிவனை மறவாத்திருவுடைக் காதலிருவர் கலந்து கூடுங்கால் தோன்றும் வித்தாகிய விந்து நடுநாடி வழியாக ஒலியாற்றல் என்னும் நாதசத்திக்கு மேற்பட்டு எதிர்த்துச் செல்லுதல் சிறப்புடைத்து. அங்ஙனம் செல்லின் அது வாயிலாகப் பிறக்கும் பிள்ளை சிவ வடிவாகத் தோன்றும். அதுபோலன்றி அமைதியாக எதிர்த்தால் செயற்கருஞ் செய்கை செய்யும் சீரியோனாகத் தோன்றும். சமமாகச் சென்றால் தனக்குத்தானே ஒப்பாகிய பேரறிவுப் பிள்ளையாகத் தோன்றும். மேற் கூறிய முறையில் ஒத்த பெருமைவாய்ந்த மைந்தனும் சிவவுலகப் பேரரசு திருவருளால் ஆளும் பெற்றியனாவன். நிகர்போதம் - சிறந்த அறிவு ; திருவடியுணர்வு.

(அ. சி.) ஏற எதிர்க்கில் - விந்துவைச் சுழுமுனையில் ஏற்றி நாதத்தை எதிர்த்துச் சென்றால், ஆற எதிர்க்கில் - நிதானமாக எதிர்க்கில்.

(7)