புகுந்து நின்றனள். பேருணர்வாகவே நின்றனள். பேரொளியாக நின்றனள். செந்தமிழ் மறையும்முறையும் வரைந்த திருஏடு அங்கையிலுள்ளவள். அவன் - சிவபெருமான். பராசத்தி - வனப்பாற்றல். (22) 1043 .ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை பாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே.1 (ப. இ.) செந்தமிழ் மறைமுறை ஏட்டைத் திருக்கையிலுடைய நங்கை. தலைமைப் பாடமைந்த மூன்று திருக்கண்களையுடைய நம்தலைவி. படிகம்போலும் தூயவெண்ணிறத்தள். வெண்டாமரை இருக்கையை விரும்புபவள். திருமுறை பாடும் திருவாயினள். பேரருள் வாய்ந்த அந்தணாட்டி. அப் பெருமாட்டியின் திருவடிகளை நம்தலை சூடுமாக. அவளுடைய பொருள்சேர் புகழை நம்வாய் பாடுமாக வேடம் - கோலம். பார்ப்பனி - அந்தணாட்டி சென்னி - தலை. தோத்திரம் - புகழ். ஏடு தொடங்குவித்து இறையருளால் எழுத்தறிவிக்கும் ஆசான் இதனை ஓதியும் ஓதுவித்தும் எழுத்தறிவிப்பன். எழுத்தறிவித்தல் - ஏடு தொடங்குதல். (அ. சி.) ஏடங்கை நங்கை - வேதம் ஆகமங்களைச் சுவடி உருவமாகக் கையில் வைத்துள்ள மனோன்மனி. [இதனால் சதாசிவ தத்துவம் ஆரம்பத்திலேயே வேதாகமங்கள் எழுதப்பட்டுச் சுவடி உருவமாய்ச் சத்தி கையில் இருந்தன என்று ஏற்படுவதாலும், வடமொழி எழுத்தில்லாத மொழியானதாலும், எழுதும் மொழி தமிழ் ஆனபடியாலும், வேதாகமங்கள் தமிழ் மொழியிலேயே இருந்தன என்றும், அது பிற்காலத்தில் தமிழ் நாடாகிய இந்தியாவுக்கு ஆரியர்கள் வந்த காலத்தில் தமிழ் எழுத்துக்களாகிய கிரந்தத்திலும், தமிழின் வழிமொழியாகிய பஞ்ச திராவிடத்தில் ஒன்றான மராட்டிய (தேவநாகரம்) எழுத்துக்களிலும் எழுதப்பட்டன என்பது தெளிவாகின்றது] (23) 1044 .தோத்திரஞ் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும் பார்த்திடு மங்குச பாசம் பசுங்கரும்பு ஆர்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே. (ப. இ.) திருமுறைகளை ஓதிப்புகழ்ந்து தொழுக. இரண்டு திருவடிகளையும் பேறு வாய்க்குமாறு ஏத்தி என்றும் வழிபடு நெறியில் உறைத்து நிற்க தோட்டியும் கயிறும், கரும்பு வில்லும் பூங்கணையும் உடையவள் அம்மை. சிவமெய்யினின்றும் சிவைமெய் தோன்றினமையால் அவள் பிள்ளை முறையாகுமாம், நடப்பாற்றலாகிய ஆதித் திருவருளுக்கு என்க. சிவை - சத்தி. மெய் - தத்துவம். (அ. சி.) வழிபடும் ஆறு இரும் - வழிபாடு செய்யும் நெறியில் நில்லுங்கள். (24)
1. பூரி. அப்பர், 5. 77 - 1. " துணையி. அப்பர், 5. 15 - 4. " தெய்வச். அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், வாராணை - 6.
|