522
 

(அ. சி.) உலப்பு - அழிதல். சிலப்பு அறியார் - சிலம்பொலி கேளாதவர். தலைப்பறியாக - தலைப்பொறி என்பது தலைப்பறி என வந்தது; தலை எழுத்து. சமைந்தவர் - பெற்றவர்.

(45)

1339. தானே எழுந்தஅச் சக்கரஞ் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே யிரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வரையெண்பத் தொன்றுமே.

(ப. இ.) திருவருள் ஆணையால் தானாகவே - இயற்கையாகவே எழுந்த நவாக்கரி சக்கரத்தைக் கூறுங்கால், இந்திரனே! மதிக்கத் தகுந்த வரைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பத்துக் கீறி அமைத்தபின் அழகு பொருந்திய ஒன்பது வரைகளின் அறைகளை எண்ணிப் பார்த்தால் எண்பத்தொன்றாகும். மான் : மன் என்பதன் திரிபு, இந்திரனாகிய மாணவன்; (137) இந்திரன். தேன் - அழகு.

(அ. சி.) மானே - இந்திரனே. மதிவரை பத்திட்டு - குறுக்கும் நெடுக்குமாக மதிக்கும் வரைகளைப் பத்தாகக் கீறி. தேனே...மே - அப்படி ஏற்பட்ட 81 அறைகள்.

(46)

1340. ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாங்
கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்
என்றிய லம்மை எழுத்தவை பச்சையே.1

(ப. இ.) குறித்த சக்கரத்தை முறையாக ஓதும் வேளையில் சக்கரத்தின் மேலிடும் வரை மதிவட்டம் போன்றிருத்தல்வேண்டும். அதனைப் பொன்நிறமாக அமைத்தல்வேண்டும். அழுத்தமாக வரையப்பட்ட ஏனைய வரைகள் சிவப்பு நிறமாக அமைத்தல்வேண்டும். ஞாயிற்றினை ஒத்துத் திகழும் அம்மையின் எழுத்தாகிய 'நமசிவய' பச்சை நிறமாக அமைத்தல்வேண்டும். இந்நிறங்கள் அனைத்தும் சக்கரத்தினைத் தொழுது பயில்வார்மாட்டும் பொலிந்து விளங்கும். என்றியல்: என்று - ஞாயிறு; இயல் - தன்மை. பொன்மை செம்மை பசுமை இவற்றை முறையே அறிவு ஆட்சி அடைவு ஆகவும் கூறலாம். அடைவு - நுகர்வு.

(அ. சி.) மேனி மதி வட்டம் - சக்கரத்தின் மேல் இடும் சந்திரன் போன்ற வரை. கன்றிய ரேகை - ஏனைய வரைகள். என்...எழுத்து - அச் சக்கரத்தின் அறைகளில் இடும் எழுத்துக்கள்.

(47)

1341. ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்ணெண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தலத் தாமுயி ராகுதி பண்ணுமே.


1. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 1.

" ஓங்காரி. 10. திருமந்திரம், 1049.

" பச்சை. அப்பர், 6. 17 - 7.