650
 

போன்றது. ஒருவனுக்குப் பந்தகாலத்தில் பின்புறத்தையும் முத்தி காலத்தில் முன்புறத்தையும் இச் சத்தி காட்டி நிற்கும். வினைப்.......கொள்ளார். தங்களுடைய வினைகள் ஒழியத் திரோதான சத்தியால் விளக்கத்தைப் பெறுவதற்கும் முயற்சி செய்யார். புறக்கடை இச்சித்து - சத்தியின் பின்புறத்தையே இச்சித்துப் பந்தத்திலேயே மூழ்கிக் கிடப்பர்.

(2)

1654. ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய முதரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலியாம் தானே.1

(ப. இ.) குடிபோல் வாழும் மக்கள் அவர்களை அன்பாக அழைத்து மொழியினும் மனங்கொள்ளமாட்டார். பாலுண்குழவி வாய் வைக்குங்கால் தாய்முலை சுரப்பதுபோல், அப் பாலால் இனிமை யுண்டாவதுபோல் நடப்பாற்றலாகிய அம்மையை நாடிப் பிறப்பற வேண்டினால், அவ்வுயிரைச் சிவத்துடன் கூட்டுதற்கு அருளுடம்பையும் அவ் வுடம்பு வளர்வதற்குத் தகுதி வாய்ந்த செந்தமிழ்த் திருவைந்தெழுத்தையும் அவள் அருளுவள். அருளுடம்பு பாலையொக்கும். திருவைந்தெழுத்து இனிமையை ஒக்கும் வேண்டுதல் வாய் வைத்தலையொக்கும். அவ் வருள் பிறவாமையை அருளும் உருவில்லாதவளாவள்.

(அ. சி.) ஏய் : விளித்தற்குறி. பிரசைகள் - மானிடர். வாய் முலை பெய்ய மதுரம் - முலையில் வாய் வைக்க மதுரமான பால். தாய் முலை ஆவது - திரோதான சத்தி தாய்போன்று இருக்கும் தன்மையை. தமருளோர் - தெரிந்து சத்தியை உறவாகக் கொண்டவர்க்கு. ஊனிலை செய்யும் சரீரத்தை அழியாமல் செய்யும். அஃதாவது பிறவி இல்லாமல் செய்யும்.

(3)

1655. வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளிகி லாரே.2

(ப. இ.) சொல்லும் நினைப்பும் செயலும் ஒல்லும்வகை ஒன்று போல் இணைந்திருப்பனவே உறுதியாகும். என்றும் பொன்றா வாழ்வு பெறும் உரிமையுடைய உயிர் நெடுந்தகை என்று அழைக்கப்பெறும். அத்தகைய உறுதி நெடுந்தகையே முப்பொறிகளும் ஒன்றுபடாமல் ஒன்றும் செய்யற்க. ஒன்றுபட்டுச் சிவனை வழிபட்டால் உயிர் தீயுருவாகிய சிவனாகும் யான் அவ் வுண்மையைத் தெளிவன். தெளிந்த பின் பெரும்பித்தும் பிடி விலகாமையும் உள்ள பேயென்று பிறர் என்னைத் தெளியமாட்டார்.


1. பிள்ளை. 12. திருக்குறிப்புத்தொண்டர், 22.

2. கண்டவர். . . . . . . . 12. காரைக்காலம்மையார், 54.

" கையொன்று. பட்டினத்துப் பிள்ளையார், 4.

" பெண்டிர். திருவுந்தியார், 35.