388
 

(அ. சி.) ஆறெழுத்து - பிரணவத்தோடுங் கூடிய தூல பஞ்சாக்கரம். ஆறெழுத்தொன்றாக - தூலத்தைச் சூக்குமந்திலும், சூக்குமத்தைக் காரணத்திலும், காரணத்தை மகா காரணத்திலும், மகா காரணத்தை முத்தி பஞ்சாக்கரத்திலும் ஒடுக்கி ஏகமாகும்படி. வேறு எழுத்து - வைகரி வடிவாய் விகாரப்பட்ட எழுத்துக்கள்.

(48)

942. ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே.

(ப. இ.) மந்திரங்கட்கெல்லாம் முதலாக ஓதப்படும் ஓங்காரத்துடன் ஏனை உயிரெழுத்துப் பதினைந்துங்கூட மொத்தம் உயிரெழுத்துப் பதினாறு. மெய்யெழுத்து முப்பத்தைந்து. ஆகமொத்தம் எழுத்து ஐம்பத்தொன்று. சோதியாகிய ஒளி எழுத்து சிவம். அகத்தே மூல முதல் புருவநடு ஈறாகவுள்ள ஆறு நிலைக்களங்கள் உள்ளன. அவற்றின்கண் பரவெளி எழுத்தாகிய ஓம் என ஒலித்துக் கண்டுகொள்க.

(அ. சி.) ஓது ...மூவஞ்சு - உயிர் 16 (திருமூலர் காலத்தில் தமிழ் மொழியில் உயிர் 16 உண்டு என்பது இதனால் அறிகின்றோம்) ஆதி... என்பர் - மெய்யெழுத்துக்கள் 35-ம் சேர்ந்து (16+35) 51 எழுத்துக்கள் என்று புலவர் கூறுவர். (செந்தமிழ்க் காலத்துக்கு முந்திய தமிழ்மொழி நிலை இது.) சோதி எழுத்து, நாத எழுத்து - சி.

(49)

943. விந்துவி லுஞ்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் 1தலைவி பதினாறு கலையதாய்க்
கந்தர வாகரங் காலுடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

(ப. இ.) சுழியாகிய விந்துவினின்று எழுத்தோசை தோன்றும். அவ்வெழுத்து ஐம்பத்தொன்று என்ப. அவ்வெழுத்துக்களின் முதல்வி திருவருளாற்றலாகும். அவள் பதினாறு கலையாக விளங்குவள். இவ்வைம்பத்தோரெழுத்தும் அம்மையின் வடிவமாக அமைக்கப்படும்.

(அ. சி.) விந்து ...திட - 51 எழுத்துக்களும் விந்துவினின்றும் உற்பத்தி... எழுத்துக்கள் எல்லாம் சத்தி உருவமாகும்.

(50)

944. ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.2

(ப. இ.) ஓங்காரத்துடன் கூடிய ஐம்பத்தோரெழுத்துக்களாலாகியதே பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும் தொன்மைத் தமிழ்மறையும்


1. (பாடம்) தலையிற்.

2. பாசஞா. சிவஞானசித்தியார், 9.

" அஞ்செழுத்தே. உண்மை விளக்கம், 45.