785
 

கருவியாக அவ் வைம்பொறிகள் அமையும்போது அவை கூரிய நகமாகவும், தீவினைக்குக் கருவியாக அமையும்போது நச்சுப் பல்லாகவும் அமைத்தறிதல் வேண்டும். அவ்விரண்டும் இறைபணிக்கு அமையுங்கால் முறையே விரல்நுதிக் காவலாகவும் சுவைப்பொருள் சுவைக்குந் துணையாகவும் சொற்பொருள் உரைக்கும் பொற்பாகவும் அமைகின்றன.

இவ்வுண்மை,

"மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயவா ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயவா ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்."

- சிவப்பிரகாசம், உண்மை - 20.

நகமும் பல்லும் இருள்முனைப்புச் செயற்குக் கருவியாங்கால் நல்வினைக்காம் நகம் நன்றல் வினைக்குப்பல், அல்முனைப்பால் ஆற்று செயற் கங்கு என்ப.

(அ. சி.) சிங்கம் - இந்திரியம். உகிர் - நகம் (செல்லுதல்) எயிறு - பல் (பற்றுதல்).

(4)

1989. ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவரு மைந்தரு மாளக் கருதுவர்
ஐவரு மைந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி1 லோமே.

(ப. இ.) 'ஆகின்ற தொண்ணூறோடாறும் பொது என்பர்' (2139) ஆதலின் அத் தொண்ணூற்றாறு மெய்களும் ஐவர் அமைச்சர் ஆவர். மற்றைய மெய்கள் 'வாயின் மிலேச்சர், சாரணர், தூதர், சூத மாகதர், புரோகிதர்' முதலாயினரும்; இவுளி மறவர், யானையவீரர், தறுகணாளர், மள்ளர், தந்திரத் தலைவர் முதலாயினாரும்; 'உறுதிச் சுற்றத்தாரும்' பிறரும் ஆவர். இவ் வைவரும் மெய் வாய் கண் மூக்குச்செவி யென்னும் அறிதற்கருவி ஐந்தும் என்ப. இவ் வைவரும் தாங்கள் நுகரவேண்டிய முறையே உள்ள ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்பனவற்றை உண்டு முடிக்கக் கருதுவர். அவற்றின் எண்ணப்படியே விட்டால் அந் நுகர்வு எல்லையின்றிச் செல்லும். அவ் வைவரும் வலிமை மிக்க சினத்துடன் இருப்பரானால் அவர்கட்கு இறை இறத்தலாகிய புலன்களைத் தொகுத்துக் கொடுத்தல் என்றும் நம்மால் முடியாத தொன்றாகும். இறையிறுத்தல்: ஓவாது கொடுத்து நிறைத்தல். ஐவர்க்கு இறை என்பதை மனமெனக் கொண்டு அம் மனம் அவ் வைம்புலனையும் விரும்பியவாறு நாம் செல்ல இடங்கொடுத்துவிட்டால் மனம் விரும்பிய நுகர்வுகளைத் தேடிக் கொடுப்பது நம்மால் முடியாத தொன்றாகும். அவ் வுண்மை:

"பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாம நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே."

அப்பர். 5. 90 - 5.


1. முப்பர். அப்பர், 4. 54 - 3.