978
 

(அ. சி.) அம் பதம் - அழகிய அந்தப் பதம். மேலைச்சொரூபமா வாக்கியம் - கரணம் கடந்த உருவத்தை அறிவிக்கும் மகா வாக்கியம். செம்பொருள் - சிறந்தபொருள்.

(5)

2403. ஐம்ப தறியா தவரு மவர்சிலர்
உம்பனை நாடி யுரைமுப்ப தத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தானவ னாகுமே.

(ப. இ.) ஆருயிர்கட்கு அகவை ஐம்பதாகியும் முப்பொருள் உண்மையினைத் தப்பின்றித் தெரியுந்தன்மை வாய்த்திலது. அகவை - வயது. அதுபோல் சிலர் அறியாதவராவர். அவரும் அருள் நினைவால் 'தத்துவமசி' என்னும் முப்பதத்தை நாடிப் பெறுவதாகிய சிவனை நாடும் வழியாக முப்பதத்திடை வாசியாகிய உயிர்ப்பினைச் செலுத்தியிடச் செம்பர நிலைக்கு வழியமையும். அவ் வழி தமக்குரிய சிவனுடன் கூடுவதாகிய யோகமாகும். இச் செறிவு வழியாக ஆருயிர் சிவத்துடன் கூடிச் சிவனாகும்.

(அ. சி.) ஐம்பது - ஐம்பது வயதாகியும், செம்பரம் - செம்பொருள், வாசி செலுத்திட - பிராணாயாமப் பயிற்சி செய்ய.

(6)

2404. நந்தி யறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியஞ் சத்தாதி விடவிய னாகும்
நந்திய மூன்றிரண் டொன்று நலமைந்து
நந்தி னனவாதி மூட்டும் அனாதியே.

(ப. இ.) பொருந்திய ஆருயிர்அறிவு அருள் நினைவால் நழுவப் பெறுமானால் மேற்பாடு என்று சொல்லப்படும் அப்பால் நிலையாகும். மேற்பாடு - மேலாலவத்தை. பொறிகள் ஓசை முதலிய புலன்களைக் கொள்ளாது நிற்கும். அந் நிலை விட்ட நிலையாகும். ஆருயிராகிய அவனும் விட்டவனாவன். அம் மேற்பாட்டின்கண்ணும் பொருந்திய உறக்கம், கனவு, நனவு என மூன்றுண்டு. கனவு நனவு என இரண்டுண்டு. நனவு என ஒன்றுண்டு. இந் நன்மைப் பாடாகிய மேற்பாடு ஐந்தும் அகன்றால் தொன்மைப் பெரும் பொருளாம் சிவபெருமான் நனவாதியிற் கூட்டுவிப்பன்.

(அ. சி.) அறிவு நழுவில் - உலக பாசம் ஒழிந்தால், விடவியன் - விட்டவன், மூன்றிரண்டு ஒன்று நாலைந்து - ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து அவத்தைகள்.

(7)

2405. பரதுரி யத்து நனவு படியுண்ட
விரிவிற் கனவும் இதனுப சாந்தத்து
உரிய சுழுனையு மோவுஞ் சிவன்பால்
அரிய துரியம் அசிபத மாமே.

(ப. இ.) மேற்பாட்டின்கண் ஏற்படும் பேருறக்கநிலையில் நனவு நிலை பொருந்திய இயல்பும் உண்டாம். இதனது விரிந்த நிலையில் கனவும்