| 110.
|
அலறுபே
ராவை நோக்கி யாருயிர் பதைத்துச்
சோரும்; |
|
| |
நிலமிசைக்
கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி
நிற்கும்;
“மலர்தலை யுலகங் காக்கும் மனுவெனு மெங்கோ
மானுக்
குலகிலிப் பழிவந் தெய்தப் பிறந்தவா வொருவ“
னென்பான். |
25 |
(இ-ள்.)
அலறு...சோரும் - (மேற் சொல்லியவாறு) அலறுகின்ற
சிறந்த பசுவை ஒருபுறம் பார்த்து (அதன் உயிர் பதைக்கின்றவாறே
அரச குமாரனும்) தனது ஆருயிர் பதைபதைத்துச் சோர்வடைவான்;
நிலம்...நிற்கும் - (மற்றொருபுறம் தன் தேர்க்காலிலிறந்துபட்டு)
நிலமிசை வீழ்ந்து கிடக்கும் கன்றைப் பார்த்து விசனத்தால்
பெருமூச்சு விட்டு இரங்கி நிற்பன்; மலர்தலை...என்பான் - “விரிந்த
உலகத்தால் பலவுயிர்களையும் காக்கக் கடவியனாய், முன்னைய
மனுவே இவர் எனச் சொல்லப் பெறுகின்ற, எனது அரசர்
பெருமானுக்கு உலகிலே இல்லாத இப்பெரும் பழிவந்து சேரும்படி
நான் அவருக்கு ஒரு மகனாய்ப் பிறந்தேனே“ என்று சொல்வானாய்
- என்பான் - சென்றான் என்று வரும்பாட்டின் வினைமுற்றொடு
முடிக்க.
(வி-ரை.)
சோரும் - மனத்தின் செய்கை; இரங்கி
நிற்கும்
- உடம்பின் செய்கை; என்பான் - வாக்கின் செய்கை. எனவே,
பசுவின வருத்தத்தை மனம் வாக்குக் காயம் எனும்
முக்கரணங்களாலும் அரசு மைந்தனும் அடைந்தனன் என்க.
மலர்தலை உலகம் காக்கும்
- “மன்னுயிருக் கெல்லாம்
...பெருங்காவல்“ என்று மேலே காட்டிய அரசனது குறிக்கோளாகிய
உள்ளக்கிடையை இங்குக் கூறிவாறு.
மனு எனும்
- 100-ம் பாட்டில் “மனுப்பெற்ற நீதி“ என்றது.
கோமான்
- தந்தை என்னாது கோமான் என்றது பசுவதைப்
பழிக்குத் தான் காரணமாயினமையின் தனது தந்தை என்று கூறல்
தகுதியின்று எனக் கருதியமை குறித்தது. கோமான் - பசுவைப்
பாதுகாப்பவன் என்ற குறிப்புங் காண்க.
உலகில் இப்பழி -
பின்னர் 36-வது திருப்பாட்டிற்
கூறுகின்றபடி அறங்காத்தலினால், இதுவரை இல்லாதாகிய இந்தப்பழி,
தன்னாற் காக்கப்பெற்றதும் நீதி மனுஎன்று பேர்பெறுவதும் ஆகிய
உலகிலே, அதுமாறிப் பசுவதைத்த பழியாகிய இந்தப் பெரும் பழி;
ஆனால் இது அரசனைச் சேர்வதற்கில்லை எனும் பொருள் பெற
உலகு - இல் - பழி என்றதும் குறிப்பு.
வந்தெய்த
- அப்பழி வருதற்குக் காரணமாகிய செயல்
ஒன்றும் தான் செய்யாதிருந்தும், பழி பாவம் வாராதுகாக்கும்
காவலும் நீதியும் புண்ணியமும் செய்திருந்தும், பழிதானே வலிய
(துள்ளிப்போந்த வழியே) வந்து - புகுந்து - சேர.
பிறந்தவா - பிறந்தபடி. பிறந்ததனைவிடப்
பிறவாமலே
இருந்தால் நன்றுஎன்க.
ஒருவன்
- இப்பழிநீக்கப் பசுஉறுதுயர் தானும்எய்தத், தன்னை
அரசன் தேர்க்காலில் ஊரும்; ஊர்ந்துவிட்டபின் தூயவனாக்கும்
மரபுக்குரிய மைந்தன் வேறில்லையே - என்று கவன்று ஒருவன்
என்றான்.
என்பான் - என்பானாகி. என்று சொல்லிக்கொண்டே
(சென்றான்) என்க.
இம்மைந்தன், அரசனைப் போலவே, தன்னுயிர்க் கிரங்காது
பசுவுக்குங்கன்றுக்கும் இரங்கித், தன் பொருட்டு வருந்தாது அரசன்
புகழுக்குக் குறைவருமென்று வருந்தினான். இதனையே முன்னர்த்
“தந்தை காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி“ என்று காட்டினார்.
“நிற்க அதற்குத் தக“ என்றதற்கு இவன் இலக்கியமாயினன்.
பிறந்தவாறொருவன் - என்பதும் பாடம்.25
|
|
|
|