| 118. 
           | 
          மன்னுயிர் 
            புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தி  
                                               னீடும் 
             | 
            | 
         
         
          |   | 
          என்னெறி 
            நன்றா லென்னு மென்செய்தாற் றீரு  
                                            மென்னுந்; 
            தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு  
                                            சோரும்; 
            அந்நிலை யரச னுற்ற துயரமோ ரளவிற் றன்றால்.  | 
          33 | 
         
       
       
           (இ-ள்.) 
      மன்னுயிர்...என்னும் - “நிலைபெற்ற உயிர்களை  
      எல்லாம் தீங்கு வராமற் காத்து உலகம் எல்லார்க்கும் பொதுவா  
      மென்பதின்றி எனக்கே உரியதென்னும்படி தரும வழியே இந்நீண்ட  
      காலம் செலுத்திய எனது அரசாட்சி மிக நன்றாயிருக்கின்றது!“ என்று  
      தன்னைத்தானே இகழ்ந்து கூறுவான்; என்...என்னும் - என்ன  
      செய்தால்தான் இது தீர்வடையப்போகிறது! என்று சொல்வான்;  
      தன்...சோரும் - தனது இளங்கன்றைக் காணாத தாய்ப் பசுவைப்  
      பார்த்துச் சோர்வடைவான்; அந்நிலை...அன்றால் - இவ்வாறு  
      அந்நிலையில் அரசன் அடைந்த துன்பத்திற்கு ஓர் எல்லை இல்லை. 
       
           (வி-ரை.) 
      உயிர்புரந்து அறத்தில் நீடுதல் - அறத்திலே 
       
      நிலைத்து நின்று உயிர்களைக் காத்து, அறத்தின் வழியே காவல்  
      புரிதல். இதனாலே “காவலன்“ என்ப. இதன் விரிவை “மாநிலம்  
      காவலனாவான்“ என்னும் 121-வது பாட்டிற் காண்க. 
       
           பொதுக் கடிந்து 
      - உலகம் காத்தல் பிறருக்கும் உரியது  
      என்று பொதுவாதலை நீக்கித் தனக்கே உரிமையாக்கிக் கொண்டு  
      என்க. “பொதுக் கடிந்து இனிது காக்கும் கொற்றவன்“ என்பது  
      திருநாட்டுச் சிறப்பு. 85-வது பாட்டு. 
       
           என் செய்தால் தீரும் 
      - என்பது தீர்வில்லாமை கருதியது.  
      சோரும் - அதன் துயத்தை மாற்றும் வழியில்லையே என்று  
      சோர்வடைந்தான். 
       
           அறத்தின் நீடும் என் நெறி - முன் மனுஅரசர் 
      காலம்  
      முதல் இதுவரை நீடிவந்து அறவழியிலேயே நிலைத்து நின்றதாகிய  
      எனது அரசு. 
       
           நீடும் 
      - பின்னரும் அவ்வகையே நீடும் என்பதும் தொனிக்  
      குறிப்பாகும். 
       
           இப்பாட்டிற் குறித்தவை அரசன் தனக்குத் தானே  
      சொல்லியவை.   33 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |