| 134. 
           | 
           பொன்றயங்கு 
            மதிலாரூர்ப் பூங்கோயி  
                                    
            லமர்ந்தபிரான் 
             | 
            | 
         
         
          |   | 
          வென்றிமனு 
            வேந்தனுக்கு வீதியிலே  
                                   யருள்கொடுத்துச் 
            சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு  
                                      தன்னடியார்க் 
            கென்றுமெளி வரும்பெருமை யேழுலகு  
                                    
             மெடுத்தேத்தும்.  | 
          49 | 
         
       
       
           (இ-ள்.) 
      பொன்...கண்டு - அழகிய மதில் சூழ்ந்த  
      திருவாரூரிலே பூங்கோயிலிலே எழுந்தருளிய இறைவன் வெற்றி  
      பொருந்திய மனுச் சோழருக்குத் திருவீதியிலே காட்சி தந்து தனது  
      பேரருளையுங் கொடுத்துஎழுந்தருளிய கருணைத் திறத்தைக் கண்டு;  
      தன்னடியார்க்கு...ஏத்தும் - அவ்விறைவன் என்றும் இவ்வாறே  
      அடியவர்களுக்கு எளிதாக வெளிவந்து அருள்புரியும் பெருமையை  
      ஏழுலகங்களும் எடுத்துத் துதிக்கும்.  
            
       
           (வி-ரை.) பொன் 
      தயங்கு மதில் - அழகினால் ஒளி வீசும்  
      மதில். பூங்கோயில் - திருவாரூர்த் திருக்கோயிலின் 
      பெயர் - பூவின்  
      அகமலர் போன்று இருத்தலின் பூங்கோயில் எனப்பட்டது.  
      இதன்விரிவை வரிசை 43-ம் பாட்டின்கீழ்க் காண்க. இதற்கு  
      “எப்பொழுதும் பூக்களால் பந்தலிட்டிருப்பதால் பூங்கோயில்  
      என்றார்“ என்பாருமுளர்.  
            
       
           வென்றி 
      - வெற்றி - மனிதர்களை அடிமைப்படுத்தும் உலகக்  
      கட்டுக்கள் பலவற்றுள்ளும் மிகுவலிமை உடைத்தாய்க்  
      “கடந்துளார்களும் கடப்பரோ மக்கள்மேற் காதல்“ என்று விதந்து  
      கூறப்படுவதாயுள்ள மக்கட்காதலை, இறைவன் பணித்த அறநெறிக்குக்  
      கீழ்ப்படுத்தி, அதுகாரணமாக இறைவன் திருவருளைப் பெற்றதை  
      வென்றி என்றார்.  
            
       
           வீதியீலே...திறம் 
      - அரசன் தேர் ஊர்ந்தது கண்டார், அரச  
      குமாரனும் கன்றும் எழுந்ததையுங் கண்டார். இவற்றிற்குக் காரணமாய்  
      இளம் பிறையும் திருநுதலும் கொண்ட கோலத்தைக் கண்டு அரசன்  
      போற்றப் பெருமான் கொடுத்த அருளையுங் கண்டார். ஆதலின்  
      பெருங்கருணைத் திறம் கண்டு என்றார். 
       
             பெருங்கருணை 
      - இன்னும் இதன் திறங்களை முன்னர்  
      “முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ“ என்ற  
      இடத்துங் காண்க.   
       
           தன் அடியார்க்கு என்றும் எளியவரும் பெருமை -  
      “அடியவருக் கெளியானை“, “அடியார்க் கடியன் சிற்றம்பலவன்“ 
       
      எனவரும் எண்ணிறந்த திருவாக்குக்கள் காண்க. “என்றும்  
      அடியார்க்கு எளிவந்தாய் எந்தாயே“ என்ற திருவிளையாடற்- 
      -புராணமும் குறிக்க. 
       
           ஏழுலகும் 
      - ஏழு என்று எண்ணப்பட்ட உலகங்களில் உள்ள  
      அறிவுடையோர். ஏழு வகைப் பிறப்புக்களில் உள்ள அறிவுடை  
      உயிர்கள் என்றுமாம்.  
       
       
           எடுத்து ஏத்தும் 
      - பாராட்டித் துதிக்கும். 
       
            கண்டு...ஏத்தும் 
      - ஏத்தும் என்ற செய்யும் எனும் வாய்பாட்டு  
      வினைமுற்றாற் கூறியதனால் “அன்றுமுதல் இன்றுவரை“யும், இனியும்  
      ஏத்தும் என்க. அந்நாளிலே நேரிற்கண்டார் ஏத்தினார்; அவர்  
      கண்ணாற்கண்டு ஏத்தியதை வழி வழி அதன்பின்  
      காதாற்கேட்டுக்கண்டு ஏத்தும் உலகு. ஆதலின் கண்டு...ஏத்தும்  
      என்பது பிற்காலத்தார்க்கும் பொருந்துவதாயிற்று என்க. என்றும்  
      ஏத்தும் - எனக் கூட்டி உரைத்தலுமாம். 
       
            இவ்வரிய 
      செயலைச் சிலப்பதிகாரம் - மணிமேகலை முதலிய  
      பழந்தமிழ்ப் பெருநூல்கள் எல்லாம் விதந்து எடுத்துப் பேசும். 
       
            “அரும் பெயர்ப் புதல்வனை ஆழியின் மடித்தோன்“ 
      -சிலப்,  
      வழக்கு, 20  
       
      
      
         
          | “கறவை 
            முறை செய் காவலன்“ - 
            சிலப், வழக்கு, 29. | 
         
       
       
        
      
         
          | “மகனை 
            முறை செய்த மன்னன்“ 
            - மணிமேகலை. | 
         
       
      முதலியவை காண்க. நம் 
        முன்னோர் நீதிமுறையில் வைத்த உயர்ந்த  
        நோக்கம் இதில் விளங்குவதாம். சைவசாத்திரங்களும் இதனை  
        எடுத்துப்பாராட்டியுள்ளன. 
         
             மனு வேந்தனுக்குப் பெரியபுராணம் தோற்றுவதற்குக் 
         
        காரணமாய் இருந்தது அநபாயரது தருமமும் - நீதியும் - சால்புமே  
        யாதலின் அவர்க்கு வழிமுதல்வராய் நீதி போற்றிய மனுச்சோழர்  
        செய்தியை ‘மன்னு சீரநபாயன் வழிமுதல்“ என்று போற்றினார்  
        ஆசிரியர். ஆரூர்ப் பெருமான் எண்ணிறந்தோர்க்கு அருள்  
        புரிந்ததுவேமனுச்சோழர் நீதிக்குக்காரணமாம். அதுவே வழிமுதலாய்  
        அநபாயர் நீதிக்குக் காரணமாயிற்று. அதுவே பெரியபுராணத்துக்குக்  
        காரணமாயிற்று. ஆதலின் திருவாரூர்ச் சிறப்பும் அங்கு இறைவன்  
        அருட் செயல்களும் பலப்பல வாயினும் இதனை இப்பகுதியிலே  
        சிறப்பாய் விதந்து எடுத்து ஓதிப் பிறவற்றை உய்த்துரை வைத்தார்  
        ஆசிரியர். 49
      
    |