| 141. 
           | 
          மாசி 
            லாத மணிதிகழ் மேனிமேற்  | 
            | 
         
         
          |   | 
          பூசு 
            நீறுபோ லுள்ளும் புனிதர்க 
            டேசி னாலெத் திசையும் விளக்கினார் 
            பேச வொண்ணாப் பெருமை பிறங்கினார். | 
          6 | 
         
       
       
           (இ-ள்.)மாசிலாத........புனிதர்கள் 
      - குற்றமற்ற உருத்திராக்கம்  
      பூண்ட தமது திருமேனியிலே மேலே பூசிய திருநீற்றின்  
      தூய்மைபோலவே உள்ளும் புனிதத்தன்மை வாய்ந்தவர்களாம்;  
      தேசினான்.......விளங்கினார் - இவர்கள் தமது ஒளியினால்  
      எவ்வுலகங்களையும் விளக்கஞ் செய்வார்கள்; பேச......பிறங்கினார் -  
      ஆதலின் இவ்வளவென்று வரையறுத்து வாக்கினாற் கூறமுடியாத  
      பெருமையில் விளங்குபவர்கள். 
       
           (வி-ரை.) 
      மாசிலாத மணிதிகழ் மேனி - மாசிலாத மேனி 
       
      என்றுகூட்டுக. மாசிலாத மணி என்று மணியுடன்  
      கூட்டியுரைப்பதுமாம். தன்னைப் பூண்டவர்களது மாசுகளை  
      இல்லையாகச் செய்யும் என்க. அடியவர் திருமேனியில் விளங்கிய  
      போது மணியானது தனது இயல்பாகிய தூய விளக்கத்தின் மேலாயது  
      - என்பார் - மணிதிகழ் மேனி என்றார் - மணி திகழ்தற்கு இடமாகிய  
      மேனி. மணி -  
      உருத்திராக்கமணி; உருத்திரமூர்த்தியினுடைய  
      கண்ணினின்றும் தோன்றியது. ஆதலால் உருத்திர - அக்க - மணி  
      என்பர். மாசிலாத நீறு என்று கூட்டி உரைப்பதும் ஒன்று. இதன்  
      விரிவைப் பின்னர் திருஞானசம்பந்தசுவமிகள் புராணம் - 764-ம்  
      திருப்பாட்டின் கீழ்க்காண்க. நீறுபோல் - 
      மேலே பூசும் நீற்றின்  
      புனிதம் போல் என்க. “சுத்தம தாவது நீறு“ - தேவாரம். நீற்றின்  
      தன்மைகளை முன்னர் வரிசை 138-வது பாட்டின்கீழ்க் காண்க. 
       
           உள்ளும் புனிதர் - எச்ச உம்மை. திருநீற்றின் 
      புனிதத்  
      தன்மையை உய்த்துணர வைத்ததாம். 
       
           தேசினால் எத்திசையும் விளக்கினார் -  
      (உட்புனிதராகையால்) தேசு - மனத் தூய்மையாலும் அருளினாலும்  
      உண்டாகும் ஒளி. “ஐந்துமாறு அடக்கியுள்ளார் அரும்பெருஞ்  
      சோதி“ என்று பின்னர்க் கூறுவதுங் காண்க. நீற்றின் தேசு  
      என்பாருமுளர். 
       
           பேசவொண்ணாப் பெருமை 
      - “அளவில்லாத பெருமையர்“  
      என்று பாயிரத்திற் கூறியதின்கீழ்க் காண்க. இங்குத் திருநீற்றினாலும்,  
      உட்புனிதத்தாலும் உளதாம் பெருமை. இது அளவிடற்கரியதாதலின்  
      “பேச வொண்ணாப் பெருமை“ என்றார். 
       
       
      
         
          |  
             “பேணியணிபவர்க் 
              கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு“  
           | 
         
       
       
      என்பது தேவாரம். 
       
          பெருமை பிறங்கினார் 
      - பெருமையிலே விளங்குகின்றவர்கள். 
       
           இவ்விரண்டு பாட்டுக்களில் முதற்பாட்டு அகப்பெருமையும், 
       
      இரண்டாம் பாட்டுப் புறப்பொலிவையும் விளக்கியதாம். 6
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |