| 
	   
      
      
         
          |  
            160.  | 
           காலைசெய் 
            வினைகண் முற்றிக் கணிதநூற் புலவர்  
                                             சொன்ன 
            வேலைவந் தணையு முன்னர் விதிமணக் கோலங்  
                                           கொள்வான் 
             | 
            | 
         
         
          |   | 
          நூலசைந் 
            திலங்கு மார்பி னுணங்கிய கேள்வி  
                                            மேலோன் 
            மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்.  | 
          14 | 
         
       
       
            (இ-ள்.) 
        வெளிப்படை. காலைக்கடன்களை முடித்தபின்,  
        சோதிடர்கள் குறித்த நல்லவேளை வருவதற்குமுன்னாகவே,  
        விதிப்படிச்செய்யும் மணக்கோலங் கொள்வதற்காகப், பூணூல்  
        அசைந்து விளங்கும் மார்பினையும் நுணுகிய கேள்வியையுமுடைய  
        மேலோராகிய நம்பியாரூரர் மணிமாலையும் மலர்மாலையும் விளங்கத்  
        திருமஞ்சனசாலையிற் புகுந்தார். 
            (வி-ரை.) 
        காலை செய்வினைகள் - காலையில் எழுந்ததும் 
         
        செய்யக்கடவனவாகிய நித்திய கடமைகள். செய்வினை -  
        செய்யக்கடவனவாம் வினை. 
            கணிதநூற் 
        புலவர் - சோதிடர். காலங்கணித்து நன்னாளும்  
        நல்வேளையும் நிச்சயிப்பவர். வேளை - பொழுது. இங்கு, குறித்த  
        நல்வேளை என்க. 
            விதிமணம் 
        - இயற்கை மணத்தினின்றும் வேறாதலின்  
        விதிமணம் என்றார். நூல்களில் விதித்த சடங்குகளுடன்  
        பெற்றோர்களாற் றரப்பெற்றுச் செய்யும் மணம். (இயற்கை மணம் -  
        தலைவன் தலைவியர் தாமே கொள்வது). மணக்கோலம் -  
        மணமகனுக்குரிய மணக்கோலம். நூல் அசைந்து இலங்கு மார்பு -  
        நுல் அசைவதாலும் பிற அரச அணிகளாலும் விளங்கும் மார்பு.  
        நுணங்கிய கேள்வி மேலோன் -மிக நுணுகிய பொருள்களிலும்  
        கேள்வியினால் மேம்பட்டவர். மார்பு - மேனி வனப்பும், கேள்வி -  
        அறிவின் வனப்பும் குறித்து நின்றன. 
            மாலை 
        - தார் - மணிமாலை. மலர்மாலை - மாலை  
        விகற்பங்கள் என்பதுமாம். 
            மார்பன் 
        நுணங்கிய - என்பதும் பாடம். 14  
      
   |