| 165. 
              | 
           மன்னவர் 
            திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்க 
            நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் நாதன் 
             | 
            | 
         
         
          |   | 
          றன்னடி 
            மனத்துட் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப் 
            பொன்னணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு  
                                             
            போந்தார்.  | 
           | 
         
       
       
           (இ-ள்.) 
        மன்னவர்.........பொங்க - (மேற் சொல்லியபடி) 
         
        அரசர் பெருங்கோலத்தின் அழகிய காட்சியும் தமக்குரிய வைதிகப்  
        பெருங் கோலத்தின் அழகிய காட்சியும் மேன்மேலும் கூடிக்  
        கண்டாரை விரும்பும்படிச் செய்ய; நன்னகர் விழவு கொள்ள -  
        அந்நகர் முழுதும் மணவிழாக் கொண்டாடவும்; நம்பி.......சாத்தி -  
        இறைவனது திருவடிகளைத் தம் மனத்திலே எண்ணித் திருநீறு  
        அணிந்து கொண்டவராய்; பொன்.......போந்தார் - பொன்னால்  
        அழகாக அலங்கரிக்கப் பெற்ற நல்லிலக்கணங்களுடன் கூடிய  
        குதிரையின்மேல் ஏறிச் சென்றார். 
            (வி-ரை.) 
        திரு - கண்டாரால் விரும்பப்படும் தன்மை 
         
        நோக்கம் - இங்கே நம்பி ஆரூரரினது இருதிறக் காட்சியும்  
        கண்டாரை விரும்பச் செய்தன என்பார் இருதிருவும் பொங்க  
        என்றார். 
            தங்கள் 
        - மன்னவர் திருவானது தங்களுக்கு  
        உரித்தல்லாமையாலும், அரசர் காதற் பிள்ளையாய்க்  
        கொண்டதனாலே மட்டும் பெற்றமையானும், தங்கள் என்பதனை  
        வைதிகத்திருவுடன் சேர்த்துக் கூறினார். 
            மன்னவர்திரு 
        - தாமம் - கலன்கள் முதலியன. இதனை  
        மேற்பாட்டிற் கூறினார். வைதிகத்திரு - முந்நூல் - பவித்திரம்  
        முதலியன. இதனை அதற்கு மேற்பாட்டிற் கூறினார். இவ்விரண்டும்  
        ஒன்று சேர்ந்து நம்பிகளிடத்துப் பொருந்தியமையால் குளகமாக்கி  
        அவ்விரண்டு பாட்டுக்களையும் ஒன்றாய்ச்சேர்த்து முடித்தார். 
            புரவிமேல் 
        கொண்டு - மணமகன் குதிரையின்மீது போந்து  
        மணவீட்டுக்கு வருதல் அந்நாள் வழக்கு. இந்நாளிலும் சில  
        கூட்டங்களில் இவ்வழக்கம் உண்டு. 
            யோகப்புரவி 
        - யோகம் - கூடுதல். நற்சுழி - முதலிய  
        நல்லிலக்கணங்கள் எல்லாம் கூடிய. சுபத்தை விளைக்கும்  
        சுழிகளையுடைய. சரியையாதி நாற்பாதத்துள்ளும் நம்பியாரூரர்  
        யோகபாதத்தை விளக்கவந்த மூர்த்திகளாதலும் குறிப்புப்போலும்.  
        யோகநிலையை வாசி - பரி - புரவி - என்று குறிப்பர்  
        திருமூலதேவர். 
            தகுந் 
        திருநீறு சாத்தி - மேலே சொல்லிய  
        இருவகைத்திருவுக்கும் வேறாய்; அவற்றிற்கு மேற்பட்டு, அவற்றை  
        அணிந்த பின்னர் மேலே அணியத்தகுவதாய், இறைவன்  
        திருவடிநினைவுடன் அவனது நாமமந்திரத்துடன் அணியத்தகுவதாய்,  
        உள்ள ஏற்றங் கருதித் தகும் திருநீறு - என்றார். மேலே  
        சொல்லியவை பிறர் சாத்தத் தாம் அணிந்தனர். அவ்வாறன்றித்  
        திருநீற்றைத் தாமே விதிப்படி அணிந்தனர். ஏனையவற்றினும்பார்க்க  
        இவர்க்கு இதுமிகத் தகுவதென்றலுமாம் என்க. திருமலையில்  
        இறைவனுக்கு நீறு எடுத்து அணைவாராயினமையும் குறிக்கும். 
         
            அடிமனத்துட் 
        கொண்டு - ஆட்கொள்ள நின்ற சரிதத்தின்  
        முற்குறிப்பு. அடிகளை உட்கொண்டு புரவி மேற்கொண்டு என்ற  
        சுவையையும் குறிப்பையும்காண்க.  
       |