| 179. 
               | 
          வந்துதிரு 
            மாமறை மணத்தொழி றொடங்கும் | 
            | 
         
         
          |   | 
          பந்தரிடை 
            நம்பியெதிர் பன்னுசபை முன்னின் 
            றிந்தமொழி கேண்மினெதிர் யாவர்களு  
                                         மென்றான் 
            முந்தைமறை யாயிர மொழிந்ததிரு வாயான். | 
          33 | 
         
       
       
           (இ-ள்.) 
      வந்து...நின்று - (அவ்வாறு எய்தி) வந்து மணந்  
      தொடங்கும் பந்தரிலே நம்பியாரூரர் எதிரிலே சபையின் முன்னர்  
      நின்றுகொண்டு; முந்தை...வாயான் - பழமையாகிய அளவில்லாத  
      வேதங்களைச் சொல்லிய வாயினையுடைய சிவபெருமான்;  
      இந்த...என்றான் - யாவர்களும் யான் சொல்லப்போகிற இந்த  
      மொழிகளைக் கேளுங்கள்! என்று சொன்னார். 
       
           (வி-ரை.) 
      எய்த - சழங்க - (29) - தாழ - நுடங்க - விளங்க  
      - (30) - கூர - கொள்ள - கொள்ள - (31) - எய்தி - (32) - வந்து  
      - நின்று - வாயான் என்றான் (33) என முடிவு செய்க. 
       
           திருமாமறை மணத்தொழில் 
      - வேத மந்திரங்களுடன்  
      ஆகம விதிப்படி செய்யும் கலியாண முயற்சிகள். வரிசை 173-ல்  
      மணத்திறம் என்றதும் இது. 
       
           தொடங்கும் பந்தர் - எனவே தொடங்கினார்களே 
      யன்றி  
      இதுவரைச் சடங்குகள் ஒன்றும் செய்யப்பெறவில்லை என்பதாம். 
       
           மறை ஆயிரம் - அனந்த வேதம் - அநந்தாவை 
      வேதா:  
      என்ப பிரமாணம். ஆயிரம் - அளவிலாத - எண்ணிலாத - எனும்  
      பொருளில் வந்தது. எண்ணுப் பெயரல்ல. ஆயிரந் தாமரை போலும்  
      ஆயிரஞ் சேவடி யானும்....என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. 
       
           முந்தை மறை 
      - வேதம் நாத உருவுடையதாதலின்  
      முதன்மையுடையதாம். வரிசை 177-ல் பழைமை என்ற இடத்துக்  
      காண்க. 
       
           எதிர் - எதிரிலே. வரிசை 183-ம் பாட்டிலே 
      பின்னர்  
      இந்நாவனகர் ஊரன் என்று சுட்டுகின்றதும் காண்க. 
       
           நம்பி எதிர் - நம்பிக்கு 
      எதிராக - நம்பிக்கு மாறாக.  
      எதிர்மொழி என்பது உங்கள் கருத்துக்கெல்லாம் மாறாய் உள்ளது  
      இந்த மொழி என்று குறிப்பிட்டதுமாம்.    33 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |