| 182. 
              | 
          நெற்றிவிழி 
            யான்மொழிய நின்றநிகரில்லான் 
             | 
            | 
         
         
          |   | 
          ‘உற்றதொர் 
            வழக்கெனிடை நீயுடை துண்டேன் 
            மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன்; 
            முற்றவிது சொல்லு'கென வெல்லைமுடி வில்லான். | 
          36 | 
         
       
       
           (இ-ள்.) 
      நெற்றி.......இல்லான் - நெற்றிக் கண்ணை மறைத்து  
      வந்த வேதியர் இவ்வாறு சொல்ல ஒப்பற்ற பெருந்தகையாம்  
      நம்பி அவரை நோக்கி; ‘உற்ற தொர்......சொல்லுக' என -  
      ‘என்னிடத்துப் பொருந்தியதொரு வழக்கு உனக்கு உண்டானால்  
      அதனை முடித்தபின் பல்லாமல் நான் மணஞ்செய்ய மாட்டேன்;  
      ஆதலின் இதனை முடிவுபெறச் சொல்லுக' என்று சொல்ல; எல்லை  
      முடிவில்லான - அளவும் முடிவுமில்லாத அவ்விறைவன்.  
       
           (வி-ரை.) 
      நெற்றி விழியான் - நெற்றிக்கண்ணுடைய  
      சிவபெருமான். கண்ணுதல். இப்போது அதனை விழிக்காமல் வந்தவன் -  
      விழியாதவன் - என்ற எதிர்மறைக்குறிப்பும் காண்க. கண்ணிடை  
      கரந்த என வரிசை 175 பாட்டிற் கூறியதும் காண்க. 
       
           வதுவை - 
      மணம்; கலியாணம். 
       
           முற்றஇது சொல்லுக 
      - வழக்கு முடித்தலது வதுவை  
      செய்யேன் ஆதலின் தொடங்கிய இது (இவ்வதுவை)  
      முற்றுப்பெறும்படி சொல்க. உன் வழக்கு வெற்றியாய் முற்றுமாறும்  
      என் அடிமை முற்றுமாறும் என்ற குறிப்பும் காண்க. 
       
           நிகர் இல்லான் 
      - தமக்கு ஒப்பார் ஒருவருமில்லாதவர்.  
      இப்புராண காவியத்தலைவராதலும், ஒப்பாரும் மிக்காரும்  
      இல்லாதவரே காவியத் தலைவராதற்குரியார் ஆதலும் குறிப்பாம்.  
      இவ்வாறு வல்வழக்கிட்டு ஆட்கொள்ளப் பெற்றமையாலும்  
      தோழராயினமையாலும் பிறவாற்றாலும் தமக்கு ஒருவரும்  
      ஒப்பில்லாதவராயினர். 
       
           எல்லை முடிபு இல்லான் 
      - ஆதியந்த மில்லாதவர்;  
      அளவைகளைக் கடந்தவர்; எதனாலும் அளக்கலாகாதவர். 
       
       
      
         
          முன்னைப் 
            பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே 
            பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே 
                                                  - 
            திருவாசகம். | 
         
         
          |   | 
         
         
          | இன்னவுரு 
            வின்னநீற மென்றுணர்வ தேலரிது 
            - தேவாரம் | 
         
       
       
      முதலிய பிரமாணங்கள் காண்க. 
      36  
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |