| 183. 
               | 
          ‘ஆவதிது 
            கேண்மின்மறை யோரெனடி யானிந் | 
            | 
         
         
          |   | 
          நாவனக 
            ரூரனிது நான்மொழிவ' தென்றான் 
            தேவரையு மாலயன் முதற்றிருவின் மிக்கோர் 
            யாவரையும் வேறடிமை யாவுடைய வெம்மான்.  | 
          37 | 
         
       
       
           (இ-ள்.) 
      ஆவது.....மொழிவது என்றான் - ‘நான்  
      சொல்லுவதாவது இதுவே; மறையோர்களே! இந்த நாவலூர்நம்பி  
      எனது அடிமையாவன்; இதுவே நான் சொல்லவந்த வழக்கு' என்றார்;  
      தேவரையும்......எம்மான் - தேவர்களையும் பிரம விட்டுணு முதலிய  
      பெருந்திருவுடையோர் யாவர்களையும் தனியாக அடிமையாக  
      வுடையானாகிய எம்பெருமான்.  
       
           (வி-ரை.) 
      ஆவது இது - மேலே முற்ற இது சொல்லுக 
       
      என்றதையே தொடர்ந்து, நம்பி ‘சொல்லுக இது' என்ற இது  
      இதுவேயாம் என்றார். இதுவே ஆவது - உலகில் இதுவே எல்லா  
      உயிர்க்கும் ஆக்கம் தருவது. மற்றவை எல்லாம் அல்லவை என்று  
      கூட்டத்தாரை நோக்கிச் சொல்லி, அதன்மேற் சொல்வாராய்  
      நம்பியைச் சிறப்புறச் சுட்டி ‘இந்நாலூரன் என் அடியான்' என்று  
      அநுவதித்துக் கூறினார். 
       
           வேறடிமை உடைய - (1) வேறு வேறு - தனித்தனி -  
      அடிமைகளாக உடைய. (2) நம்பிகளை அடிமையாக்கொண்ட  
      திறத்தினின்று வேறுபட்டதாகிய மற்றொருவகையாலே என்ற குறிப்பு. 
       
           யாவரையும் வேறடிமையா 
      வுடையான் - என்றதனால்  
      அவரது அளத்தற்கரிய பெருமையையும் அவரால் வலிந்து  
      வேண்டப்பெற்ற இவரது சிறப்பும் உணர்த்தியவாறு. அவர்கள்  
      அடிமைத்திறம் வேறு; அவர்கள் தூர அடிமைகள்; வாய்தல் பற்றித்,  
      துன்றி நின்றார் தொல்லை வானவர்கூட்டம் பணியறிவான்,  
      வந்துநின்றாரயனும் திருமாலும்.... - அப்பர் சுவாமிகள் தேவாரம்.  
      இவர் அணுக்கத்தொண்டர் என்பதும் குறிப்பு. இவன் மற்றென்  
      அடியான் என விலக்கும், சிந்தையால் வந்துன்றிருவடி யடைந்தேன்  
      என்ற நம்பிகள் திருப்புன்கூர்த்தேவாரம் இங்கு நினைவுகூரத்தக்கது.37 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |