| 208. 
              | 
          திரண்டமா 
            மறையோர் தாமுந் திருநாவ லூரர்  
                                            கோமுன் | 
            | 
         
         
          |   | 
          மருண்டது 
            தெளிய மற்ற மறையவ னெழுத்தா  
                                            லோலை 
            அரண்டரு காப்பில் வேறொன் றழைத்துட  
                                     னொப்பு 
            நோக்கி 
            ‘இரண்டுமொத் திருந்த தென்னே யினிச்செய  
                                    லில்லை' 
            யென்றார். 
             | 
          62 | 
         
       
       
           (இ-ள்.) 
      திரண்ட.......தாமும் - சபையினரும் அவ்வாறு  
      செய்வதென்று இசைந்து; திருநாவலூரர்......நோக்கி - முன்னே நம்பி  
      ஆரூரர் கொண்ட மருட்சி நீங்குமாறு அவரது பாட்டனார் தாமே  
      எழுதிய வேறு ஓலையைத் தகுந்த பாதுகாவலில் வைக்கப்பட்டிருந்த  
      இடத்திலிருந்து வரவழைத்து அதன் எழுத்தை வேதியர் காட்டிய  
      ஓலையின் எழுத்துடன் ஒத்துப் பார்த்து; இரண்டும்........என்றார் -  
      ‘இரண்டு எழுத்துக்களும் ஒன்றுபோலவேயிருந்தன; என்னே! இனி  
      வேறு யாம் செய்யக்கடவன ஒன்றுமில்லை' என்று சொன்னார்கள். 
       
           (வி-ரை.) 
      திரண்ட மாமறையோர் - கூடிய சபையோர். 
       
           திருநாவலூரர் கோ - நம்பியாரூரர். 
      முன் மருண்டது -  
      மேலே (வ. 200) மாயை - இது தெளியவொண்ணாது - என்ற  
      மருட்சி. நாவலூரர் கோ முன்பாக ஓலையை வரவழைத்து என்று  
      கூட்டியுரைத்தலும் ஒன்று. 
       
           மற்ற மறையவன் 
      - மேலே (வ. 206) மற்று உங்கள் பேரனார்  
      என்ற இடத்திற் போல உரைத்துக் கொள்க. மற்று +அ + மறையவன்  
      என்க. 
       
           எழுத்தால் ஓலை - 
      அவரே எழுதிய ஒலை. மேற்பாட்டின்  
      உரையில் தான் வேறெழுது என்று இடத்துக் காண்க. 
       
           அரண்தரு காப்பு 
      - ஊர்ப் பொதுமன்றங்களிலே சேமித்துப்  
      பாதுகாவலில் வைக்கப்பெற்றது. இது அந்நாள் வழக்கு. இக்காலத்து  
      அரசாங்கப் பத்திரப் பதிவு அதிகாரிகள் குடிமக்களது கை  
      எழுத்துக்களைப் பாதுகாக்கும் முறையையும், பத்திரங்களைப்  
      புகைப்படம்பிடித்துப் பிரதிசெய்து காக்கும் புதுமுறையையும்  
      நோக்குக. இதுபோன்ற, இதனினும் மேன்மையான, ஒருமுறை  
      பண்டைநாளிலே தமிழர்களிடை வழங்கி வந்தமை சரிதங்களில்  
      அறியக் கிடக்கின்றது. 
       
           அரண்தரு காப்பு - வேறொருவர் மாற்றக்கூடாத 
      காவல்.  
      Safe custody என்பது இந்நாள் வழக்கு. இதற்கு அவரது வீட்டில்  
      பாதுகாவலில் வைத்திருந்த என்று உரைப்பாருமுண்டு. 
       
           உடன் ஒப்புநோக்கி 
      - இது இரண்டினும் உள்ள  
      எழுத்துக்களையும் கைச்சாத்துக்களையும் ஒத்துப் பார்த்து.  
      Comparison of handwriting and signature என்பர் நவீனர்.  
      இரண்டும் - எழுத்தும் கைச்சாத்தும். 
       
           என்னே! - (ஒன்றுபோலவே இருந்தது;) என்ன 
      அதிசயம்! 
       
           இனிச் செயல் இல்லை - இவ்வழக்கு விசாரணையில் 
      நீதி  
      முறைப்படி இனி நாம் செய்யவேண்டிய செயல் வேறு ஒன்றுமில்லை.  
      நீதியில் விதித்த எல்லாவகையாலும் தேர்ந்து முடித்தோம் என்றபடி.  
      இவ்வழக்கு விசாரணையில் முன்னர்க் குறித்த எல்லாச்  
      செயல்களையும் குறிப்பிட்டபடியாம். இவ்வாறன்றிச் செயல் என்பதற்கு  
      நம் செயல் ஒன்றுமில்லை; இனி எல்லாம் சிவன் செயலே என்று  
      பொருளுரைப்பாருமுண்டு. அது பொருந்தாமை யறிக. 62
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |