| 251. 
              | 
          வையகம் 
            பொலிய மறைச்சிலம் பரற்ற 
                 மன்றுளே மாலயன் றேட | 
            | 
         
         
          |   | 
          ஐயர்தாம் 
            வெளியே யாடுகின் றாரை 
                 யஞ்சலி மலர்த்திமுன் குவித்த 
            கைகளோ திளைத்த கண்களோ வந்தக் 
                 கரணமோ கலந்தவன் புந்தச் 
            செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான் 
                 றிருக்களிற் றுப்படி மருங்கு. | 
          105 | 
         
       
       
            (இ-ள்.) 
      வையகம்.....ஆடுகின்றாரை - பிரம விட்டுணுக்கள்தேட, 
      உலகம்விளங்க, வேதச் சிலம்பு ஒலிப்ப, அம்பலத்தினுள் வெளியே  
      திருக்கூத்து இயற்றும், அந்த இறைவனை; அஞ்சலி.....உந்த -  
      மலர்த்தியும் குவித்தும் கூப்பிய கைகளும், ஆனந்தித்த கண்களும்,  
      இவற்றின் உட்கலந்த அந்தக்கரணங்களும், கொண்டவராய்  
      அன்பினாலே உந்திச் செலுத்தப்பெற்று; செய்தவம்.......மருங்கு -  
      செய்யும் தவத்திற் பெரியோராகிய நம்பிகள் திருக்களிற்றுப்படியின்  
      பக்கத்திலே சென்று தாழ்ந்து எழுந்தனர். 
       
           (வி-ரை.) 
      வையகம் பொலிய ஆடுகின்றாரை; சிலம்பரற்ற  
      ஆடுகின்றாரை; மாலயன் தேட ஆடுகின்றாரை எனத் தனித்தனி  
      கூட்டுக. பொலிய என்பதனை அரற்ற என்றதுடன் கூட்டி வையகம்  
      பொலியும் பொருட்டுச் சிலம்பு சத்திக்க என்றுரைத்தலுமாம். வையகம்  
      - அதிலுள்ள உயிர்களுக்கு ஆகுபெயர். பொலிய 
      - பயனடைய. 
       
           மன்றுளே - வெளியே 
      - மாலயன் தேடு அவ்வையர்  
      வெளியே மன்றினுள் வையகம் பொலிய மறைச்சிலம்பரற்ற  
      ஆடுகின்றாரை என்று கூட்டுக. தேடு - அ - ஐயர். 
      அகரச்சுட்டுப்  
      பெருமை குறித்தது. வகரம் விகாரத்தாந் றொக்கது. தேட  
      ஆடுகின்றாரை என்று கொண்டு உரைப்பினும் அமையும். 
       
           தாம் - 
      உயிர்களிடத்து வைத்த இரக்கத்தாலே தம்மை  
      ஆட்டுவார் பிறரின்றித் தாமே யாடுகின்றார் என்க. மேற் பாட்டினுரை  
      காண்க. வெளியே - வெளியாய் வெளியதன் 
      வெளியாய்  
      வெளியதன் வெளியின் வெளிநட நவில்கின்றான் என்பது பேரூர்ப்  
      புராணம். 
       
           வையகம் பொலிய - 
      இன்பத் துன்பங்களாகிய போகங்களை  
      மட்டும் நுகர்தற்கிடமாகிய சுவர்க்க நரக உலகங்கள் போலாது,  
      சிவகருமஞ் செய்து முத்தி யடைதற்குரிய இடமாதலின் வையகம்  
      பொலிய என்றார். 
       
       
      
         
          ..........கயிலை 
            புல்லென வெறிவிசும்பு வறிதாக - இம்ப ருய்ய  
                                            அம்பலம் 
            பொலியத் 
            திருவளர் தில்லை மூதூர் - அருநடங் குயிற்று மாதிவா  
            னவனே  -கோயினான்மணிமாலை - பதினொராந் 
            திருமுறை | 
         
       
       
      என்று பட்டினத்தடிகள் அருளியதும் 
      காண்க.  
      அவ்வுலகங்களினுள்ளார் போக முடிவிலே இங்குவந்து பிறந்து  
      சிவகருமஞ் செய்தே முத்தி யடையவேண்டுதலின் பூமியிற் பிறவாது  
      நாள் கழிக்கின்றோமே என்று ஏங்குவர் எனப், புவனியிற்  
      போய்ப்பிறவாமையி னாணாம், போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி,  
      சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று திருவாசகத்துட் கூறியதும்  
      காண்க. க்ஷீணே புண்யே மத்ய லோகம் விசந்தி என்பது  
      உபநிடதம். 
       
           மறைச்சிலம்பு அரற்ற 
      - நாதமாகிய சிலம்பு ஒலிக்க. வேதம்  
      நாத சொரூபமானது. அதுவே இறைவன் காற்சிலம்பாம்.  
      நாதத்திலிருந்து விருத்தியாய் வேதம் தோன்றும். குடிலையின் வழியே  
      புவனங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றிய புவனங்களிற் பிறந்த  
      உயிர்களுக்கு வேதமே வழிகாட்டும். இறைவன் வேதாந்தத்து  
      விளங்குபவன்; ஆதலின் அவன் காலில் நிற்பது நாதமாகிய சிலம்பு  
      என்க. 
       
       
      
         
          ஐவகை 
            யெனும்பூத மாதியை வகுத்ததனு ளசரசர பேதமான 
            யாவையும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை யாதிநூ லையும்  
                                                       வகுத்துச் 
            சைவமுத லாமளவில் சமயமும் வகுத்து........ - 
            தாயுமானார். | 
         
       
       
           ஐயர் 
      தாம் வெளியே ஆடுகின்றாரை - ஐயராய்த்  
      தாமேயாய் வெளியில் ஆடுகின்ற இறைவனை. அஞ்சலி மலர்த்தி  
      குவித்த - அஞ்சலியாக மலரச்செய்து கூப்பிய. 
       
           முன் குவித்த கைகளோ - கண்களோ - அந்தக்கரணமோ 
       
      அன்பு உந்த - அன்பு தூண்டுதலினாலே மனம் முதலிய  
      உட்கரணங்கள் தொழில் செய்யும் - பின்னர் அவை எவுதலினால்  
      கண் காணும் - கண்டதனால் அதன்பின் கைகுவியும்; ஆனால் இவை  
      இங்கே தவயோக முயற்சியினாலே ஒருங்கே நிகழ்ந்தமையாலே,  
      அம்முறையிற் கூறாது மாற்றிக் கூறினார். ஒன்றன்பின் ஒன்றாய்ப்  
      பின்னே நிகழ வேண்டியவை அவ்வாறன்றி முன்னே நிகழ்ந்தன  
      என்பார் முன் என்றார். நிருவி கற்பம் சவிகற்பம் என்ற காட்சி  
      யிரண்டனுள்ளே முதலிற் கண்டபோது பொது நோக்காகிய  
      நிருவிகற்பக் காட்சி நிகழும். பின் மனதோடு கலந்து உற்றறிதல்  
      உண்டாகும். அதன்பின் இன்னது செய்தல் வேண்டுமென்பது  
      தோன்றும். பின்னரே அச்செயல் நிகழும். இந்த நான்கு வகை  
      நிகழ்ச்சிகளும் கர்ப்பூரத்திலே தீப்பற்றுதல்போல் தீவிரதர பத்தி  
      யுடையார்க்கு எது முன்னர் நிகழ்ந்ததென்றறியமுடியாதபடி  
      விரைவிலே நிகழும். இந்த விரைவையும் அற்புதத்தையுமே கைகளோ  
      - கண்களோ - கரணமோ - என்ற ஓகாரங்களாற் கூறினார்.  
       
           குவித்த - திளைத்த 
      - கலந்த என்பவற்றை மேலே  
      கூறியபடி பெயரெச்சங்களாகக் கொள்ளாமல் அன்பு உந்தக் கைகள்  
      குவித்த; கண்கள் திளைத்தன; அந்தக்கரணங்கள் கலந்தன; என  
      வினைமுற்றாக்கி உரைத்தலுமாம். 
       
           திளைத்த கண்களோ 
      - இங்கே நிருவிகற்பக் காட்சியுடன்  
      ஒருங்கே சவிகற்பக் காட்சியும் நிகழ அதன் வழியே செயலும்  
      நிகழ்ந்தது. 
       
           கண்கள் திளைத்தன - 
      கண்டு அவ்வானந்தக் காட்சியிலே  
      மாறாது நிலைத்தன கண்ணொளியும், அதனுடன் கலந்த  
      உயிர்போதமும், அதனுடன் ஒன்றித்த சிவசத்தியும் கூடியவழியே  
      காட்சியுண்டாம். ஆயின் ஏனைக்காட்சிகள் ஒருபுலன்  
      நுகரும்போதங் கொன்றிலை யொன்றின் பாலும்வருபயன் மாறிமாறி  
      வந்திடும் என்றபடி மாறும். ஈண்டு இக்கண்களோ, முன்னமே  
      அக்காட்சி வசப்பட்டு அதிலே நிலைபெற்ற சிந்தை கலந்தனவாதலின்  
      மாறாது திளைத்தன என்க. இதனையே, 
       
           குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே 
       
      காணப் பெற்றால் கண்களாற் பின்னைப் பேய்த் தொண்டர்  
      காண்ப தென்னே என்று அப்பர் சுவாமிகள் அருளியவை காண்க.  
      என்கண்ணு ளெப்போதும் வருகின்றனவே (20) என்றது  
      பொன்வண்ணத்தந்தாதி. 
       
           அந்தக் காணமோ கலந்த 
      - உட்கரணங்கள் நான்கு. சித்தம்,  
      மனம், அகங்காரம், புத்தி என்பன. உயிர் 
      - சித்தமாய் நின்று இது  
      யாதாகற்பாலது எனச் சிந்திக்கும்; அதன்பின் மனமாய் நின்று இஃது  
      இன்னதாகற்பாலது எனப் பற்றும்; அதன்பின் அகங்காரம் இது  
      ஆமோ? அன்றோ? இதனை இன்னதெனத் தெளிவேன் யானெனத்  
      தெளிவு பிறவாதெழும்; அதன் பின்னர்ப் புத்தியாய் நின்று இஃது இன்னதெனத் தெளியும்; 
      இவ்வகை வெவ்வேறாய் முற்றுப்பெறாத  
      செய்கையுடையன வல்லாதபடி முன்பயிற்சியாலே ஒருங்கே முற்றிய  
      செய்கையுடையன ஆயின என்க. இவற்றின் மேல்விளைவை வரும்  
      பாட்டிற் காண்க. உட்கரணங்களின் தொழிற்பாட்டு முறையைச்  
      சிவஞானபோதம் 4-ம் சூத்திரம் சித்தாய்ச் சித்தம் என்ற  
      வெண்பாவின்கீழ் ஸ்ரீ சிவஞான சுவாமிகள் உரையிற் காண்க. 
       
           அன்பு உந்தச் சென்று 
      தாழ்ந்து எழுந்தான் -  
      அன்பினாலே உந்தப்பெற்றுச், சென்றனர் - தாழ்ந்தனர் - எழுந்தனர்  
      என்க. மேலே சொல்லியபடி குவித்த கைகளும், திளைத்த கண்களும்,  
      கலந்த கரணமுமாகிச் சென்று என்க. 
       
           அன்பு உந்த 
      - என்றதைச் சிங்க நோக்காகக் கொண்டு,  
      குவித்தல் முதலிய மேற்செயல்களுக்கும் கூட்டுக. உந்துதல் -  
      விரைந்து தள்ளுதல். 
       
           செய்தவம் பெரியோன் - பண்டு செய்த 
      நற்றவத்தாற்  
      பெரியரானவர். 
       
           திருக்களிற்றுப்படி - 
      யானைத் துதிக்கை வடிவுடையனவாகிய  
      திரணைகள் இரண்டுபுறமும் அமைந்துள்ள ஐந்து படிகள்.  
      இவ்வைந்தையும் ஏறிக் கடந்து சென்றால் அருட் பெருங் கூத்தனைக்  
      காணலாம். களிற்றுக்கை சூழ்ந்தமையால் இது இப்பெயர்பெற்றது.  
      களிற்றுக்கை பிரணவத்தையும், ஐந்து படிகள் திருவைந்தெழுத்தையும்  
      குறிக்கும். ஐந்தெழுத்தால் அறியப்பெறுபவன் அவை குறிக்கும்  
      ஐந்தொழில் ஆனந்தக் கூத்தனாதலை அவற்றின்மேற் காணும்  
      இறைவனது திருவுருவம் இயம்பும். 
       
           இக் களிற்றுக்கை எடுத்து நடராசர் திருப்பாதத்தே 
       
      வைத்தமையால் காரணப் பேர் பெற்றது திருக்களிற்றுப்படியார் என்ற  
      சைவசித்தாந்த சாத்திரம். 
       
           (திருவணுக்கன் றிருவாயில் புகுந்த) பெரியோன் - அன்பு 
       
      உந்தச் சென்று - ஆடுகின்றாரை - மருங்கு - தாழ்ந்து - எழுந்தான்  
      என்று கூட்டிமுடிக்க. 
       
           பொலிய - விருத்தியுற. ஆடுகின்றார் 
      - அங்ஙனம்  
      ஆடுகின்ற அவரை (அருட்பேற்றினை வேண்டுங் குறிப்பால்)  
      மலர்த்திச் சந்நிதியில் அஞ்சலித்த கைகளையோ? தரிசித்ததினால்  
      வந்த இன்பத்திற் றிளைக்கும் கண்களையோ? தியானிக்கின்ற  
      கரணங்களையோ? இவைகளில் எதனையோ அன்பானது செலுத்தக்  
      தவத்தாற் பெரிய நாயனார் படிமருங்கு போய் வணங்கி எழுந்தார்  
      என்பது இராமநாதச் செட்டியார் உரைக் குறிப்பு. 
       
           சிலம்பார்ப்ப - முன்போற்றும் - என்பனவும் பாடங்கள். 
      105  
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |