| 268. 
           | 
          மங்கலகீ 
            தம்பாட மழைநிகர்தூரியமுழங்கச் | 
            | 
         
         
          |   | 
          செங்கயற்கண் 
            முற்றிழையார் தெற்றிதொறு 
                                          நடம்பயில 
            நங்கள்பிரான் றிருவாரூர் நகர்வாழ்வார்  
                                        நம்பியைமுன் 
            பொங்கெயினீ டிருவாயிற் புறமுறவந்  
                                    தெதிர்கொண்டார். | 
          122 | 
         
       
       
           (இ-ள்.) 
      வெளிப்படை, மங்கல கீதங்கள் பாட, தூரியங்கள்  
      முழங்க, ஆடற் பெண்கள் நடம் பயில, திருவாரூர் வாழும்  
      அடியவர்கள் மதிற்புற வாயிலில் வந்து நம்பிகளை எதிர் கொண்டு  
      வரவேற்றார்கள். 
       
           (வி-ரை.) 
      பாடுவோரைக் கீதம் பாடச் செய்தும்,  
      முழக்குவோரைத் தூரியம் முழக்கச் செய்தும், ஆடற் பெண்களை  
      நடம்பயிலச் செய்தும் ஆரூர் வாழ்வார் நகரின் மதிற்புற வாயிலில்  
      நம்பிகளை எதிர்கொண்டார் என்க. பாடுவோர் - முழக்குவோர்கள் -  
      வருவித்துரைக்க. 
       
           பாட - முழங்க - பயில - என்பவற்றை மேற்பாட்டுக்களிலே 
       
      கொண்டதற்கேற்ப இவற்றைப் பாடுவித்து - முழக்குவித்து -  
      பயில்வித்து எனப் பிறவினைப் பொருளாகக் கொள்க. இங்ஙனமின்றி  
      நகர்ச் சிறப்பியல்பாலே அவை அவை தத்தம்படியாகவே பாட -  
      முழங்க - பயில - வாழ்வார் எதிர்கொண்டார் என்றுரைப்பினுமாம்.  
      வரிசை 87, 88, 89 பாட்டுக்கள் காண்க. 
       
           மழை நிகர் தூரியம் 
      - மேக கர்ச்சனைபோன்று முழங்கும்  
      பேரிகைகள். மழை அதற்குக் காரணமான மேகத்தைக் குறித்ததாகிப்,  
      பின் அதன் முழக்குக்கு ஆயிற்று. இருமடியாகுபெயர். 
       
           செங்கயற்கண் முற்று 
      இழையார் - சிவந்த கயல்மீன்  
      போன்ற கண்ணுடையராய் முழுதும் வேலைப்பாடமைந்த அணிபூண்ட  
      ஆடற்பெண்கள். இழையார் என்ற பொதுப்பெயர் நடம்பயில என்ற  
      இடம் நோக்கி ஆடற்பெண்களைக் குறித்தது.  
       
           நடம் பயில 
      - பாடலுக்கும் தூரிய முழக்கிற்கும் பொருந்தும்  
      வகையில் நடம் ஆட. 
       
       
      
        
          காந்தார 
            மிசைபரப்பிக் காரிகையார் பண்பாடக் கவினார்  
                                                      வீதித் 
            தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவை  
                                                      யாறே | 
         
       
       
      என்ற தேவாரத்தினை இங்கு 
      வைத்துக் காண்க. 
       
           முன் - 
      முன்னே வந்து. நம்பிகள் வருவதற்கு முன்பே  
      வாயிற்புறம் வந்து. 
       
           வாயிற்புறம் வந்து 
      - இது தலத்தின் வெளித் திருவாயில்.  
      மேலே வரிசை 266-ம் பாட்டிற் குறித்த உயர் வாயில்களிலிருந்து  
      பிரித்துணர்த்துதற்குப் பொங்கெயில்நீள் திருவாயில் என்று  
      அடைகொடுத்துக் கூறினார். 122  
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |