| 360.. | 
           
            வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து  
                                                வந்தார் 
            மாதொரு பாக நோக்கி மல்குசிற் றம்ப லத்தே  ஆதியு முடிவு மில்லா வற்புதத் தனிக்கூத் 
            தாடு  நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடு நலத்தின்  
                                               மிக்கார்; | 
             1 | 
         
       
           (இ-ள்.) 
        வேதியர்....வந்தார் - மேலே விரித்துச் 
        சொல்லிய  
        அந்தணர்கள் வாழ்கின்ற தில்லை என்கின்ற தொல்பெரும் பதியிலே  
        அவதரித்தவர்; மாது..........மிக்கார் 
        - உமையம்மையா ரமர்ந்த ஒரு  
        பாகத்தை நோக்கிக்கொண்டு, நிறைந்த திருச்சிற்றம்பலத்தி னிடமாக  
        நின்று, ஆதியுமந்தமுமில்லாத அற்புதத் தனித் திருக்கூத்தினை  
        ஆடுகின்ற இறைவனது திருவடிகளையே போற்றி வழிபட்டு வருகின்ற  
        நல்லொழுக்கத்திலே தலைசிறந்தவர். 
         
             (வி-ரை.) 
        வேதியர் தில்லை மூதூர் - நாயனாரது 
         
        சரிதத்திற்குரிய நாட்டுச் சிறப்பும், நகரச்சிறப்பும், அதன் குடிச்சிறப்பும்  
        உரைத்ததுடன் முன் புராணத்திற் கூறிய பொருளைத்  
        தொடர்ந்துகொண்டு அந்த வேதியா என அனுவதித்து  
        எடுத்துக்கொண்டதுமாம். மூதூர் - பழம் பதி. 
         
             வேட்கோவர் 
        - குயவர். மண்ணிலே குல உரிமைத் தொழில்  
        செய்பவர் என்பது பொருள். 
         
             மாதொருபாக நோக்கி 
        - அம்மையார் இருக்கும்  
        இடப்பாகத்தைத் திருவருளினாலே நோக்கம்செய்து கொண்டு.  
        நோக்கி ஆடும் நாதனார் என முடிக்க. “வலப்பானாட்டமிடப் 
         
        பா னோக்க“ என்பது திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (1).  
        நோக்குதல் - அருளினை அம்மையார் வழியே 
        உயிர்க்குழவிகள்  
        பெற்றுய்யும்படி பார்த்தல். ஒரு பாகம் - ஏற்புழிக்கோடல் என்ற  
        விதியால் இங்கு இடப்பாகம் என்று கொள்க. 
         
             மல்கு சிற்றம்பலம் 
        - எங்கும் - என்றும் நிறைவுற்ற ஞானாகாயம். 
         
             ஆதியும் முடிவுமில்லா 
        - இன்னகாலத்திலே, இன்ன  
        இடத்திலே தோன்றிற்று - முடிவுபெறும் என்பதில்லாத -  
        காலத்தையும் இடத்தையும் கடந்த. ஆதியுமுடிவு மில்லாத கூத்து 
        -  
        என இயையும்.  
         
             கூத்து 
        - ஐந்தொழிற் றிருக்கூத்து. இது என்றும் நித்தியமாய்  
        உள்ளது. “திகழ்பதியாம் ஈசனது நடத்தொழிலும்....அனாதி“ என்றனர்  
        உமாபதி சிவாசாரியார். 
         
             ஆதயு முடிவு மில்லா 
        நாதனார் - என்று  
        கூட்டியுரைத்தலுமாம். அற்புதம் - தனி - என்பன 
        கூத்திற்குரிய  
        அடைமொழிகள். அற்புதம் - 351ம் பாட்டிற் காண்க. அற்புதம்  
        ஞானமுமாம். தனி - தனி முதல்வன் இயற்றுவதாலும், பிறர்  
        இயற்றுதற்கியலாமையாலும் தனி என்றார். 
        இக்கூத்தின் இயல்பு  
        முன்னர் உரைக்கப்பட்டது.   
            வாழ்த்தி 
        - “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்“  
        என்றபடி, “நாதன்றாள் வாழ்க“ என வாழ்த்துதல் திருவடிக்கீழ்  
        வாழும் வாழ்வருளும் பொருட்டு. 
         
             நலம் 
        - வீடுபேறு. நலந்தருவதனை நலமென்றது உபசாரம்.  
        இவ்வழிபாடு ஒன்றே நலந்தருவதாம் என்றதாம். இப்பாட்டினுக்குத்  
        தொண்டர் என்று மேற்பாட்டிற் கூறிய அவர் என எழுவாய்  
        வருவித்துக் கொள்க. 
         
             மன்னுசிற்றம்பலத்தே 
        - என்பதும் பாடம். 1 
       |