|  
       
       
        
	      | 37. 
           | 
	      ஆதி மூர்த்தி 
            யவன்றிற நோக்கியே 
             | 
	  | 
	 
	
	      |   | 
	      மாதர் 
            மேன்மனம் வைத்தனை; தென்புவி 
            மீது தோன்றியம் மெல்லிய லாருடன் 
            காத லின்பங் கலந்தணை வரயென. | 
	27 | 
	 
	 
            (இ-ள்.) 
        ஆதி ... நோக்கியே - இறைவன் ஆலாலசுந்தரரது 
         
        செய்தியைக் கண்டவராய்; மாதர்மேல் ... அணைவாய் 
        என - நீ  
        பெண்களின்மேல் மனம் போக்கிவைத்தாய். ஆதலால்  
        தென்றிசையிலே அவதரித்து அந்த மாதர்களிடம் இன்பம் நுகர்ந்து  
        பின்னர் இங்கு வந்து அணைவாயாக என்று அருளினார். அருளவே; 
           (வி-ரை.) 
        ஆதிமூர்த்தி - எல்லாவற்றிற்கும் மூலகாரணனாக  
        நின்ற மூர்த்தி; சிவபெருமான். அந்தம் ஆதி என்மனார் என்பது  
        சிவஞானபோதம் முதற்சூத்திரம். 
         
             அவன்திறம் - அவர் மாதர்மேல் மனம் போக்கிய 
        காட்சி. 
         
             மனம் வைத்தனை - மனம் போக்கினாய் என்ற குறிப்பு.35 
         
        பார்க்க. இவர்கள் பெண்கள் என்ற எண்ணம் வைத்து நோக்குதலே  
        இங்கு மனம் வைத்தல் எனப்பட்டது.  
         
             நோக்கி - அறிந்து, தம்மையும் நோக்கிக் 
        கண்டு என்ற  
        அப்பர் சுவாமிகள் தனித் திருநேரிசையும் காண்க. இறைவர்  
        சர்வஞ்ஞராதலின் தமது எங்கும் நிறைந்த எல்லா மறியும்  
        அறிவினாலே அறிந்தார். சகஸ்ர சீரிஷ : புருஷ : சகஸ்ராட்ச  
        என்பது உபநிடதம். 
         
      
        
          அருள் 
            எங்குமான வளவை யறியார் 
            அருளை நுகரமு தானதுந் தேரார் 
            அருளைங் கருமத் ததிசூக்க முன்னார் 
            அருளெங்குங் கண்ணான தாரறி வாரே,  
              - திருமூலர் - 7, திருவருள் வைப்பு - 7 | 
         
       
            காதலின்பம் 
        - பொருள்களின்மேல் வைத்த இச்சை காதல்;  
        அந்த ஆசை காரணமாக அப்பொருள்களைப் பெற்று நுகரப்படுவது  
        இன்பம்; காதல் - இங்குத் தலைவன் தலைவியர்க்குள் நிகழும் அன்பு 
        குறித்தது. 
         
             காதலின்பம் 
        - காதலிக்கப்பட்ட பொருளாற் பெறப்படும்  
        இன்பம். 
         
             கலந்து அணைவாய் 
        - இன்பம் கலந்து அதன்பின்  
        மீண்டும் இங்கே அணைவாய் - வந்து சேர்வாய். இந்த  
        ஆணையின்படியேதான் அவரும்க்காரியம் முற்றி மீண்டு  
        அணைகின்றார் என்க. எந்தையார் அருளால் அணைவான் என  
        (17) என்று முன்னர்க் கூறியது காண்க.  
         
             என - என்று ஆணையிட. மனம் 
        வைத்தனை ஆதலின்  
        தோன்றிக் கலந்து அணைவாய் என்று அருள என முடிக்க.  27 
       |