| 377.
	  | 
	       வைத்தபின் 
            மறையவ ராகி வந்தரு  
             | 
	  | 
	 
	
	|   | 
	      ணித்தனார் 
            நீங்கிட நின்ற தொண்டரும்  
            உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்;  
            அத்தர்தா மம்பல மணைய மேவினார்.  
             | 
	      18 | 
	 
	 
             (இ-ள்.) 
        வைத்தபின்.....மீண்டனர் - அவ்வாறு வைத்து 
         
        எய்திய பின்னர், யோகியாராக வந்த இறைவர் அவ்விடம் விட்டுப்  
        பெயர்ந்தாராகவே, இதுவரை நின்று பணிகேட்ட தொண்டனாரும்  
        அவருடனே போய் வெளியே சென்று வழிவிட்டு விடைபெற்றுக்  
        கொண்டு தமது வீட்டிற்குத் திரும்பினார்; அத்தர்.........மேவினார்- 
         
        இறைவரும் தமது சிதாகாயமாகிய திருவம்பலத்திலே எழுந்தருளினார். 
         
             (வி-ரை.) 
        வைத்தபின் - வந்து முன்போல 
        நின்றுபணி கேட்ட 
        தொண்டரும் - நித்தனார் நீங்கிட - உடன்போய் - உய்த்து -  
        விடைகொண்டு - மீண்டனர் - என்று கூட்டுக.  
         
             நின்ற தொண்டர் பெரியோர் முன்பு இருத்தல் ஆகாதென்ற 
         
        விதிப்படி, இது வரை, நின்று பணிகேட்ட நாயனார். நின்றபின் என  
        (373) முன்னருங்கூறினார். 
         
             வந்தருள் 
        - அருள்புரியத் திருவேடம் தரித்து வந்தவர் என்ற 
        குறிப்பாம். 
         
             நீங்கிட 
        - அவ்விடத்தினின்று புறப்பட்டு எழுந்தருள. 
         
             உய்த்துடன் போய் 
        விடைகொண்டு மீண்டனர் - அவருடன்  
        சென்று வழிவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினார். 
         
             உய்த்து 
        - வழிவிட்டு. பெரியோர்கள் மீளும்போது அவர்கள்  
        பின்தொடர்ந்து நடந்து சென்று அவரனுமதி பெற்று வருதல்  
        ஆன்றோரொழுக்கமாம். 
         
             அம்பலம் 
        - எங்கும் நிறைந்ததாயுள்ள அறிவொளியே  
        அம்பலமாம். அம்பலம் அணைய மேவினார் - என்பது யோகியாராய்  
        எல்லாருங் காண வெளிப்பட்ட அந்த நிலையிலிருந்து கண்ணுக்குத்  
        தோற்றாத நிலையினரானார் என்ற பொருளில் வந்தது. இது  
        தில்லையின் நிகழ்ந்ததாதலின் அங்குத் திருவம்பலத்திலே  
        எழுந்தருளினார் என்றுரைத்தலுமாம். 18 
       |