|  
       
       
         
          | 402. 
             | 
           விறலுடைத் 
            தொண்ட னாரும் வெண்ணகைச்  
                                    செவ்வாய் 
            மென்றோ  
             | 
            | 
         
         
          |   | 
          ளறலியற் 
            கூந்த லாரா மனைவியும் மருளி னார்ந்த 
            திறலுடைச் செய்கை செய்து சிவலோக மதனை  
                                             யெய்திப் 
             
            பெறலரு மிளமை பெற்றுப் பேரின்ப முற்றா  
                                              ரன்றே. 
             
             | 
          43 | 
         
       
            (இ-ள்.) 
        வெளிப்படை. வலிமைபெற்ற தொண்டரும்  
        மனைவியாரும் அருளினால் நிறைந்த திறமையான அரிய செய்கை  
        செய்து மேலே கூறியபடி அதன் விளைவாகிய சிவலோகத்தை  
        யடைந்து பிறர் எவராலும் பெறுதற்கரிய இளமையைப் பெற்றார்களாய்  
        அப்போதே பேரின்பத்தை அடைந்து விளங்கினார்கள். 
         
             (வி-ரை.) 
        விறலுடைத் தொண்டனார் - விறல் 
        - வலிமை.  
        புலனை வென்றது விறல். வீடும் வேண்டா விறலின் விளங்கினார்  
        என்றதும் காண்க. இஃது வேண்டாமை என்கின்ற திண்மையால்  
        வரும் என்றார் நாயனார். விறலீனும் வேண்டாமை யென்னுஞ்  
        செருக்கு - குறள். 
         
             வெண்ணகைச் செவ்வாய் மென்றோள் அறல் இயல் கூந்தலார் 
         
        ஆம் மனைவியும் - இது மனைவியார் மீளப்பெற்ற 
        இளமைக்  
        கோலத்தியல்பு கூறியதாம். வெள்ளிய நகையினை - பற்களை -  
        யுடைய சிவந்த வாயினையும், மெல்லிய தோள்களையும், கருமணல்  
        ஒழுக்குப் போன்ற கூந்தலையும் பெற்ற இளமை உடையவராய் ஆன  
        மனைவியாரும். வெண்ணகை - வெள்ளிய பல்வரிசை. நகை 
        -  
        நகைப்பு. அதனைச் செய்யும் பல்லுக்காயிற்று. அறல் இயல்  
        கருமணலின் ஒழுக்குப் போன்ற தன்மை. ஆம் - ஆயின. 
         
             செய்து எய்தி 
        - செய்தல் - காரணம்; எய்துதல் காரியம்,  
        விளைவு. செய்ததனால் எய்தி யென்க. 
         
             தொண்டரும் மனைவியும் 
        - செய்து - எய்திப் பெற்று -  
        அன்றே - பேரின்ப முற்றார் என முடிக்க. 
         
             அருளின் ஆர்ந்த திறலுடைச் 
        செய்கை - அருளிலே  
        நிறைவுபெற்ற செய்கை. திறலுடைச் செய்கை என்று கூட்டியுரைத்துக்  
        கொள்க. அருளினாலே நிறைவு பெற்றதாகிய திறல்  
        என்றுரைப்பினுமாம். அருளின் ஆர்தலாவது - திருவருள்  
        வசத்திற்கேயன்றி வேறொன்றற்கும் 
        இடந்தராமை திறல் உடைச்  
        செய்கை - பிறர் எவராலும் செய்யலாகாத அரிய செய்கை.  
        செயற்கருமையே திறல் எனப்பட்டது. சிவலோகமதனை எய்தி 
        -  
        மேற்பாட்டிலே நம்பாலிருக்க என்று இறைவன் அருளியமையாலே  
        அன்றே சிவலோகத்தை யடைந்தனர். நம்பால் என்றது சிவலோகம்.  
        ஈண்டுச் சிவலோகம் என்றது சுத்த மாயா புவனத்தை; அதுவே  
        மீண்டு வராத முத்தியுலகமாதலின் என்க. நலமிகு சிவலோகத்தில்,  
        ஊனமில் தொண்டர் கும்பிட் டுடனுறை பெருமை பெற்றார் என  
        இவ்வாறே இயற்பகை நாயனார் புராணத்திற் (35) கூறியதுங் காண்க. 
         
             பெறலரும் இளமை 
        - பிறர் யாவராலும் பெறுதற்கரியதாய்  
        முதுமையின் பின் மீளப் பெற்றமையாலும், ஏனை இளமைகள்  
        போலல்லாமல் என்றும் நீங்காதிருக்கும் நிலைமையாலும் இதனைப்  
        பெறலரும் என்றார். அன்றியும் திருவாணை என்று நிகழ்ந்ததோ  
        அன்றைக்கிருந்த அந்த இளமையே மீளப் பெற்றமையும் குறிப்பாம். 
         
             பேரின்பம் 
        - நமதுசாமானிய பசுகரணங்களால்  
        அனுபவிக்கப்பெறும் இன்பங்கள் யாவும் சிற்றின்பங்களாம். அவை  
        சிறிதளவே நிற்பன; முடிவில் துன்பத்துக் கேதுவாவன. ஆனால் தமது  
        கரணங்கள் சிவனருட் பெருக்கினாலே சிவகரணங்களாக மாறப்பெற்ற  
        இவர்கள் அடைந்தது காலம்,இடம் முதலியன எந்த அளவைகளாலும்  
        அளவு படாததாய் உள்ளது; பேரானந்தம், பிரமானந்தம், சிவானந்தம்  
        முதலிய பெயர்களால் வேதங்களிற் பேசப்படும் பெருமையுடையது.  
        அன்று - ஏ அசை என்றொ துக்குவாரு முண்டு. 
         
      
         
          பெற்றசிற் 
            றின்பமே பேரின்ப மாமங்கே 
            முற்ற வரும்பரி சுந்தீபற, முளையாது மாயையென் றுந்தீபற  | 
         
         
          |  
             - 
              திருவுந்தியார் - 33 
           | 
         
       
      என்று சாத்திரங் கூறிய 
        தொருநிலை. ஆயின் இங்கு நாயனார்  
        சிற்றின்பத்தைத் துறந்து திருநீலகண்டத் தியானத்திலே  
        னைந்தனுபவித்து வாழ்ந்து முடிவில் பேரின்ப நிலையடைந்தனர். 43 
       |