| 418. 
             | 
           வழிவிடுந் 
            துணைபின் போத வழித்துணை யாகி  
                                              யுள்ளார் 
             
             | 
            | 
         
         
          |   | 
          கழிபெருங் 
            காதல் காட்டிக் காரிகை யுடன்போம்  
                                              போதி 
             
            லழிதகன்! போகே; லீண்ட வருங்குலக் கொடியை 
                                               விட்டுப் 
             
            பழிவிட நீபோ வென்று பகர்ந்தெதிர் நிரந்து  
                                               வந்தார். 
             
             | 
          15 | 
         
       
             (இ-ள்.) 
        வெளிப்படை. வழி காத்து விடுந்துணையாக வந்த  
        நாயனார் பின்னே வர, வழித்துணையாகி யுள்ளவராகிய வேதியர்  
        மிகப் பெருங் காதலை வெளிக் காட்டிக் கொண்டு அம்மையாருடன்  
        போகும் போதிலே, அழிதகையோனே. நீ போகாதே; (நில்); இங்கு  
        எமது அரிய குலக்கொடியாகிய அம்மையாரை விடுத்து, இங்கு உனது  
        செயலால் விளைந்த பழி விட்டொழியுமாறு நீ போவாயாக என்று  
        சொல்லி எதிரிலே கூட்டமாகக் கூடி வந்தார்கள். 
         
              (வி-ரை.) 
        வழி விடுந்துணை - சுற்றமும் 
        பதியும் துன்பஞ்  
        செய்யாது காத்து, வழி கடக்கும் அளவும் துணையாக வந்து,  
        வழிவிட்டனுப்பு மட்டுந் துணையாவார். இது நாயனாரைக் குறித்தது.  
        உலகில் எல்லாக் கணவர்களும் இவ்வகையிலே பட்டவர்களேயாகிப்  
        பிறவிப்பயணத்தில் ஏகதேசத்தில் தத்தம் ஆயுள் வரையிலே துணை  
        நின்று பின் விடுகின்றவர்களேயாவர். அதுவும் அருகி இந்நாளிலே  
        ஆயுளுள்ள போதே விடுகின்ற செயலும் மிகுந்து வருகின்றது. 
         
             ஆனால் இவ்வாறு நாயனார் போல வழியிடுந் துணையாவரர் 
         
        எவருமிலர். வழி - உயிர் இறைவனைக் கூடும் 
        வழியிலே; விடும்  
        துணை செலுத்தி விடும் துணையாவார் - என்றுரைத்தலுமாம். 
         
             வழித்துணை 
        - உயிர்கள் செல்லும் அளவற்ற பிறவிப்  
        பயணந்தோறும் சென்று சென்று அவ்வழி எவற்றிலும் துணையாவார்.  
        இறைவனுக்கு மார்க்கசகாயர் என்ற பேரும் காண்க. வானநாடனே-  
        வழித்துணை மருந்தே என்பனவாதி தமிழ் வேதங்களும் காண்க.  
        ஆண்டானும் அடியார்களும் ஒன்றுபோலவே உயிர்க்குறுதி செய்து  
        வழி செலுத்துவார்களாதலின் இங்கு இருவருக்கும் வழியும் துணையும்  
        கூறிய அழகு காண்க. 
         
             கழிபெருங் காதல் 
        - மிகப்பெரிய ஆசை. காதல் - இங்குப்  
        பெண்கள் மேல் நிகழும் ஆசை குறித்தது. கழி - பெரும் - மிகுதி  
        காட்டிய ஒரு பொருட் பன்மொழி. கழி - கழிகின்ற எனப்  
        பெயரெச்சமாக்கிக், காட்டினமட்டில் நிகழ்ந்து இனிப் பின்னர்  
        விரைவிற் கழியக் காண்கின்ற என்றுரைப்பினும் அமையும்.  
        உயிர்நாயகனாகி, உயிர்களுக்குறுதி செய்தலிலே மிகவும்  
        காதலுடையவன் என்ற இயல்பும் குறித்தபடி. 
         
             காரிகை 
        - நாயனார் வேதியர்க்குக் கொடுத்து விட்டாராதலின்  
        அதன் பின்னர்க் காரிகை, மாது, தையல் என்ற சொற்களாற்  
        பெரும்பாலும் கூறியது காண்க.      
         
             அழிதகன் - துன்மார்க்கன் 
        - அறநூல்களாற்  
        றடுக்கப்பட்டவற்றையே செய்பவன். குலக்கொடி - குலவிளக்கான  
        கொடிபோல்வாள். முன்னரும் குலமடத்தை - (411) என்றார்.  
         
             பழிவிட - பழி 
        - அறநூல்களில் விலக்கப்பட்ட செயல்கள்  
        செய்வதால் இம்மையில் வரும் இழிபு. பழிச் செயலினால் விளைவது  
        பாவம். பழி யஞ்சிப் பாத்தூண் என்ற குறளும் அதன் கீழ்  
        உரையும் காண்க. தமது குலத்துக்கு இச்செயலால் வரும் உலகப்  
        பழிப்பினை வாராது காத்தலையே இவர்கள் கருதினார்கள். ஆதலின்  
        குலக் கொடியை - என்றனர்; துணைபெரும் 
        பழியை மீட்பான்  
        (416) என அவர்களது கருத்தை முன்னர்க் குறித்ததனையும்,  நாடுறு  
        பழியுமொன்னார் நகையையு நாணாய் (421) எனப் பின்னர் அவர்கள்  
        கூறுவதனையும் காண்க.  
         
             இங்குக் குறித்த பழியாவது தம் மனைவியைப் பிறர்க்குக் 
         
        கொடுத்தார் என நாயனார்க்கும்; தம் கணவனையன்றி அன்னியரைச்  
        சார்ந்தார் என மனைவியார்க்கும்; இக்குலத்தவர் இது செய்தார் எனக்  
        குலத்தவர்க்கும்; இப்பதி - இந்நாடு இது 
        கண்டது எனப் பதிக்கும்  
        நாட்டுக்கும்;இவ்வடிமைத்திறம் இதற்குக் காரணமாயிற்று - இவ்வேட  
        தரித்தார் இதுசெய்தார் என அவ்வடிமைத் திறத்திற்கும்  
        வேடத்தார்க்கும்; வரும் பழியாம். இன்ன பிறவும் இவ்வாறு தனித்தனி  
        வைத்துக் கண்டுகொள்க.இவையெல்லாம் உட்கொண்டு உலகத்தார்  
        பேசும் பலகைப் பழியும் கருதிப் பழிவிட என்றார். விட 
        - நாயனார்  
        கொடுக்கவும் வேதியர் பெற்றுப் போகவும் நிகழ்ந்தபோதே பழியும்  
        நிகழ்ந்துவிட்டது; ஆயின் அது நீங்குமாறு செய்வதே கருமம்;  
        ஆதலின் வந்த பழி விடும்படியாக நீர் செய்யும் என்றார்கள்.  
        கிரகணம் விடும் நேரம் என்று வழக்கிற் போலக் காண்க.  
        பழிவிடநீபோ என்று - பழிநீங்கு மாறுசெய்; அதுவே உன்கடன்;  
        கொடியை இங்கு விட்டு, நீமட்டும்போ என்றதாம். நேர்ந்தபழி  
        அவ்வாறு நீமட்டும் பாதலினாலே நீங்கிவிடும் என்பது கருத்து.  
        முன்னர்ப் போகேல் என்றது கொண்டு போகாதே என்றதாம்.   
         
              எதிர்நிரந்து 
        - எதிராக நெருங்கிக் காட்டி- வேதியர் தப்பிப்  
        போகாதபடிக் கூடினார்கள். வந்து எதிர்வளைத்துக் கொண்டார்  
        (417) என்றது காண்க.       
         
              இங்குப் பழிவிட - என்ற கருத்தை 
        எளிதென வில்லிறப்பா  
        னெய்துமெய்ஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி; பகைபாவ மச்சம்  
        பழியென நான்கு மிக வாவா மில்லிறப்பான் கண் என்ற  
        திருக்குறள்களில் நாயனார் வற்புறுத்தியிருத்தல் காண்க. 
         
             தகவு அழிந்தவன் என்பது அழிதகன் எனமாறி வந்ததென்றும், 
         
        கொடி படருந் தன்மை யுடையது போலக், குலம் படர்தற் குரியார்  
        மங்கையாராகலின் குலக்கொடி என்றார் என்றும் கூறுவர் ஆலால  
        சுந்தரம்பிள்ளை. அழிதகன் - மிகுந்த பாவத்தை 
        யுடையவன். அழிது - கெட்டது; அகம் - பாவம்; 
        அகமென்பதனோடு வினை  
        தற்பொருளில் வந்த அன்விகுதி புணர்ந்து நிலை மொழியீற்று  
        மகரமும் விகுதி அகரமும் கெட்டு அகன் என நின்றது என்பர்  
        மகாலிங்கையர். 
         
             நிரைந்து 
        - என்பதும் பாடம். 15 
	 |