| 464. 
             | 
           மாலயற் 
            கரிய நாதன் வடிவொரு சோதி யாகச்  
             | 
            | 
         
         
          |   | 
          சாலவே 
            மயங்கு வார்க்குச் சங்கரன் றான்ம  
                                           கிழ்ந்தே 
             
            யேலவார் குழலா டன்னோ டிடபவா கனனாய்த்  
                                          தோன்றிச் 
             
            சீலமார் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை  
                                           நோக்கி, 
             
             | 
          25 | 
         
       
      
             (இ-ள்.) 
        வெளிப்படை. திருமாலுக்கும் அயனுக்கும்  
        அரியவராகிய நாதர் கொண்டு எழுந்தருளி வந்த அடியார்  
        வடிவமானது ஒரு சோதியாய்த் தோன்றவே, அது கண்டு மயங்கி  
        நின்ற திருத்தொண்டர்க்கு உணர்த்தும் பொருட்டுச் சங்கரனார் தாமே  
        மகிழ்ந்தவராகி, வாசனை பொருந்திய நீண்ட கூந்தலையுடைய  
        உமாதேவியாருடனே இடபவாகனத்தின்மீது வெளிப்படக் காணும்படி  
        எழுந்தருளி வந்து சீலம் பொருந்திய அடியார் பூசையினைச்  
        செய்துவந்த நாயனாரை நோக்கி,  
         
            (வி-ரை.) 
        மாலயற் கரிய நாதன் வடிவொரு சோதியாக 
        -  
        நாதன் வடிவு - இறைவன் நாயனார் பொருட்டுக் 
         
        கொண்டெழுந்தருளிய அடியவர் திருவேடம். ஒரு - ஒப்பற்ற. வடிவு 
         
        - சோதியாக - வடிவமே மறைந்து சோதியாய்த்தோன்ற. மாலயற் 
         
        கரிய என்றதனைச் சோதி என்றதற்கடையாகச் 
        சேர்த்தியுரைத்தலும்  
        சிறப்பாம். முன் ஒருநாட் கொண்ட தகுங்லவு சோதித் தனியுருவம்  
        மாலுக்கும் அயனுக்கும் அறிதற்கரியதாயிற்று. இன்று கொண்டதும்  
        சோதியுருவமேயாயினும் அடியவராகிய நாயனார்க்கும்  
        மனைவியார்க்கும் காண்டற்கெளியதாயிற்று. ஒளிகொள் மேனி  
        யுடையாயும்ப ராளீயென், றளிய ராகியழுதுற் றூறு மடியார்கட்,  
        கெளியா னமரர்க் கரியான் (காந்தாரம் - திருவெண்காடு - 6) என்ற  
        ஆளுடைய பிள்ளையார் தேவாரம் முதலிய எண்ணிறந்த  
        திருவாக்குக்கள் காண்க. இக்கருத்தையே மாலய னானவக் கொற்ற  
        வேனமும் அன்ன முந்தெரி யாத கொள்கைய ராயினார் (447)  
        என்று முற்குறிப்பாகக் கூறியருளியதுங் காண்க. 
         
             ஆக - 
        ஆயினதாலே. சாலவே மயங்குவார் - மயங்குதல் 
        -  
        அறிவு வியாபரியாதிருத்தல். இது திகைப்பின் மிகுதியால் உண்டாவது.  
        சங்கரன் - சுகத்தைச் செய்பவன் இங்கு மயக்கந் 
        தீர்த்தலுடன்,  
        இவர்களை வன்பிறவி வேதனை தீர்த்து என்றும் மாறாத பேரின்பஞ்  
        செய்கின்றானாதலின் இப்பெயராற் கூறினார். 
         
             தான் மகிழ்ந்தே 
        - அருண் மீக்கூர்ந்து தந்த  
        வெளிப்பாட்டினைக் குறித்தது. சலமிலன் சங்கரன் (அப்பர்  
        பெருமான் - காந்தார பஞ்சமம் - நமச்சிவாயத் திருப்பதிகம்)  
        என்றபடி இறைவன் வேண்டுதல் வேண்டாமை யிலாதவன்; ஆதலின்  
        மிக மகிழ்தல் அருளின் வெளிப்பாட்டினைக் குறித்தது என்க.  
        வெளிப்பாடாவது பின்வருமாறு அடியார் காணும்படி  
        உமையம்மையாருடன் இடபவாகனத்து வெளிப்பட்டுக் காட்சி தந்து  
        அருளல். தான் - தானே - பிறர் வேண்டுதலின்றியே. 
        ஏகாரம்  
        தொக்கது. 
         
             ஏலம் வார் குழல் 
         - ஏலம் - வாசனை. இங்கு  
        உமையம்மையார் கூந்தலுக்குரிய இயற்கை மணங்குறித்தது. ஏல  
        வார்குழ லாளுமை நங்கை (நம்பிகள் - தக்கேசி - கச்சி - 1)  
        காண்க. ஏலம் - மயிர்ச் சாந்து எனவும், 
        வார் - வாரி  
        அலங்கரிக்கப்பெற்ற எனவும் உரை கூறுவாருமுண்டு. குழலாளோடு 
         
        இடபவாகனனாய் -(434) பார்க்க. மனைவியாரையும் 
        உடன்கொண்டு  
        செல்வார். உமாதேவியாருடன் எழுந்தருளியது போலும். சிறுத் - புரா  
        - 84 காண்க. நீடிய பேதையா ளுடனின்றி (447) என்றதும் காண்க. 
         
             சீலம் - 
        நல்லொழுக்கம். சீலமார் பூசை. இங்கு விதிப்படி  
        புரிந்த அடியவர் பூசைகுறித்தது. பூசை என்று பொதுப்படக்  
        கூறுவதனால் அடியவர் பூசைக்குள்ளே நிறைந்த ஆண்டவன்  
        பூசையும் உட்கொண்டதாம். 25 
	 |