| 58. 
           | 
          வாச 
            நீர்குடை மங்கையர் கொங்கையிற் | 
            | 
         
         
          |   | 
          பூசு 
            கும்கும மும்புனை சாந்தமும் 
            விசு தெண்டிரை மீதழித் தோடுநீர் 
            தேசு டைத்தெனி னுந்தெளி வில்லதே. | 
          8 | 
         
       
       
       
           (இ-ள்.) 
      வாசநீர் ......ஓடுநீர் - (காவிரியானது) வாசனையுடைய  
      தனது நீரிற்குடைந்து ஆடும் பெண்களின் தனபாரங்களிற் பூசிய  
      குங்குமச் சந்தனப் பூச்சுக்களை மேலே வீசும் தனது அலைகளினால்  
      அழித்து ஓடுகின்றபடியால், அந்த நீர்; தேசு.......இல்லதே - (மேலே  
      சொல்லிய பல காரணங்களினாலும்) ஒளியை உடைய தாயினும்  
      தெளிவில்லதாம். 
       
           (வி-ரை.) 
      தேசு - (ஒளி) உடைத்தெனினும், குங்குமமும்  
      சாந்தமும் திரை மீது அழித்து ஓடுதலால் - தெளிவில்லது என்க. 
       
           வாசநீர் 
      - மேற்பாட்டிற் கூறியாங்கு வம்புலா மலர்நீர். 
       
           வீசு தெண்டிரைமீது அழித்து 
      ஓடும் - மீது வீசு  
      தெண்டிரையினால் அழித்து என்க. பெண்கள் குளிக்கும்போது தமது  
      மெய்ப்பூச்சுக்களை அழித்துக் கழுவா முன்னரே அவர்களுக்கு  
      அவ்வுதவி செய்வது என்றபடி ஆற்றுப்பெருக்கின் அலையும்,  
      அவர்கள் குடைந்தாடும் அசைவும் சேர்ந்து பூச்சாகிய சந்தனத்தைத்  
      தானே அழித்தோட வல்லதாயிற்று காவிரி என்க; படிந்தார்க்குத்  
      திருக்குற்றாலத்து அருவி உதவுதல் போல. மேலே கண்டபடி  
      அவர்களுக்கு அவ்வுதவி செய்த தேசு - பெற்றதெனினும்  
      அப்பூச்சுக்களைக் கலத்தலாலே தெளிவில்லதாயிற்று. 
       
           அழித்து வீசு தெண்டிரை 
      மீது ஓடும் - என்று மாற்றிக்  
      கூட்டி யுரைப்பதும் ஆம். அழித்து அவற்றைத் தனக்குள் சேர்த்து  
      அலையுடைய கடலை நோக்கி ஓடுகின்ற என்க. தனது நீர்முழுதும்  
      உயிர்களுக்குத் தந்து பயன் செய் காவிரி - (கடல் வயிறு நிறையாத)  
      - கடலிற் சென்று சேராததென்று முன்னர்க் கண்டாம்; ஆதலின்  
      கடலினை நோக்கிப்போகும் காலம் பெருக்குக் காலமேயாம். எனவே,  
      இப்பாட்டுக் காவிரிப் புதுநீரை உணர்த்திற்று என்று  
      இப்பொருளில்உரை செய்க. 
       
           தெளிவில்லதே - எனினும், தேசுடைத்து - என்றும் ஆம். 
       
       
           மீதிழித்தோடு - என்பதும் பாடம்.  8 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |