| 59. 
           | 
          மாவி 
            ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு | 
            | 
         
         
          |   | 
          பூவி 
           ரித்த புதுமதுப் பொங்கிட 
            வாவி யிற்பொலி நாடு வளந்தரக் 
            காவிரிப்புனல் கால்பரந் தோங்குமால். | 
          9 | 
         
       
           (இ-ள்.) 
        மா - ஆர்ப்ப - வண்டுகள் எழுந்து ஆரவாரிக்க;  
        வரை...........பொங்கிட மலையினின்று அடித்துக்கொண்டுவரும்  
        புதுப்பூக்களின் தேன் பொங்க; வாவியிற் தர - அங்கங்கே  
        வாவிகளாலே நிறைந்து நாட்டுக்கு வளம் தருதற்பொருட்டு;  
        காவிரி........ஓங்குமால் - காவிரியின் நீர் கால்வாய்களிற் பரந்து  
        எங்கும் ஓடும். 
         
             (வி-ரை.) 
        மா இரைத்து எழுந்து ஆர்ப்ப - வண்டுகள்  
        இரைத்து எழுந்து ஆரவாரிக்க; மிகுந்த ஆரவாரத்துடன் எழுந்து  
        பாடவும், ஆர்ப்ப என்பதற்கு ஆர்த்து மிக ஒலித்து - என  
        உரைத்தலுமாம். இப்பொருளில் விரித்த என்ற வினைகொண்டு  
        ஆர்த்து விரித்த பூ - என்க. 
         
             பூ விரித்த புதுமதுப் 
        பொங்கிட - பூ விரித்ததனால்  
        வெளிப்பட்ட தேன் பொங்க அதனாற் பெருகிய புனல் என்க.  
        ஆர்ப்ப - பொங்கிட - காவிரிப் புனல் நாடு வாவியிற் பொலி  
        வளந்தரக் - கால்களிற் பரந்து ஓடும் எனக்கூட்டுக. நாட்டின்  
        வளத்திற்கு வாவியும் - வாவிகளுக்குக் கால்களும் - கால்களுக்குக்  
        காவிரிப் புனலும் - அதற்கு மதுவும் - அதற்குப் பூவிரிதலும் -  
        அதற்கு ஆர்த்தலும் - முறை முறையே ஒன்றற்கொன்று முன்  
        நிகழ்ச்சிகளாகிய காரணங்களாக அணி பெற அமைத்தமை காண்க. 
         
             வரைதருபூ - மலைப்பூக்கள் மிகுதியும் 
        தேன் உடையன. ஆதலின் அத்தேன் பற்றிக் கூறினார். காவிரியாறு மலையினின்றும்  
        வருதலின் அத்தேனைக் கொண்டு வரும்; காவிரி நீரின் உருசி -  
        பெருக்கு - குணங்களுக்கு ஒரு வகையாற் காரணங் கற்பித்தவாறு.  
        காவிரியையும் இதுபோன்ற நன்னதிகளையும் சாக்கடை  
        வடிகால்களாக ஆக்கிக் கண்டு மகிழும் இந்நாள் மாக்கள் இதனை  
        எண்ணித் திருந்த ஒழுகுவார்களாயின் நன்மை பெருகும். 
         
             வாவியிற் பொலி 
        நாடு வளந்தர - சோழ நாட்டிலே  
        வாவிகள் மிக்கு இருப்பது இந்நாளிலும் கண்கூடாகக் காணத்தக்கது.  
        ஆனால் இந்நாளில் அவற்றைப் பலவகையினும் சுகக்கேடு  
        விளைக்கக்கூடிய வழிகளில் உபயோகித்து வருதல் வருந்தத்தக்கது. 
         
             காவிரி நீர் கால்களிற் பரந்து வாவிகளை நிரப்பி 
        நாட்டுக்கு  
        வளம் செய்யும்; அங்கிருந்து வாவிகளிற்புக்கும், மதகுகளின் வழியே  
        வயல்களிற் பாய்ந்தும், பயிர்க்கூழ் விளைவித்தல் அடுத்த பாட்டிற்  
        காண்க. 
         
             மலையிற் றோன்றிய காவிரியாறு சோழ நாட்டிலே 
         
        செய்யப்படும் பசு புண்ணியங்களாகிய உலக அறங்கள் முதலாகச்  
        சிவபுண்ணியங்கள் வரை எல்லாவற்றிற்கும் காரணமாயிருக்கும்  
        வழியினை உணர்த்தினார்.  
           கால்பரந்து 
        - வாய்க்கால்களிற் பரந்து - தனது கால்களினாற்  
        பரந்து - எனச் சிறு சொற்சிலேடையாதலும் காண்க. 
         
             பூவிரைத்த - என்பதும் பாடம்.   9 
       
     |