| 62.
|
உழுத
சான்மிக வூறித் தெளிந்தசே |
|
| |
றிழுது
செய்யினு ளிந்திர தெய்வதந்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம் |
12 |
(இ-ள்.)
உழுத.........செய்யினுள் - சால் உழுதபின் ஊறச்செய்து
தெளிந்த சேறு குழம்பாகப் பண்படுத்தப்பட்ட வயலுள்ளே;
இந்திர........தொழுது - தேவேந்திரனைத் தொழுது; நாறு.......
பரப்பெலாம் - நாறுநடுபவர் கூட்டமே கெடுதியில்லாத காவிரிபாயும்
நாடு எங்கும் உள்ளது. (நடுகின்ற சேற்றின் பதம் குறித்தது)
(வி-ரை.)
உழுதசால் - சால் உழுதலால்; மேற்பாட்டிற்
குறித்தபடி செய்யுழுதபின் நீர்பாய்ச்சிக் சேறாவதற்காக மறுமுறையும்
உழுவதற்குச் சால் உழுதல் என்று பெயர்.
மிக ஊறித் தெளிந்த
சேறு இழுதுசெய் - சால் உழுதலால்
நெய்போலாய சேற்றைச் சிலநாள் ஊறித் தெளியும்படி
விட்டுவைத்துக் குழம்பாக ஆக்கப்பட்ட செய் (வயல்கள்). செய்யினுள்
- நடுவார் - என்று கூட்டுக. இழுது - நெய்.
தொழுது - நடுவார் - இந்திரன் மேகவாகனனாய்,
மருதநிலக்
கடவுளாய், உழவிற்குத் துணைவனாய் இருத்தல் பற்றி அவனைத்
தொழுது வணங்கிய பின்னரே நாறு நடத்தொடங்குவர்.
பரப்பெல்லாம் - தொகுதி நிறைந்திருக்கும் என வருவித்து முடிக்க.
பழுது இல் -
தான் வருகின்றதும் நீர் தருகின்றதும் ஆகிய
காலம், எப்போதும் தவிர்தல் இல்லாத என்க. “வருநாள் என்றும்
பிழையாத் தெய்வப் பொன்னி“ என்று பின்னரும் கூறுவர். பழுது
இல்லையாகச் செய்கின்ற என்றுரைத்தலுமாம். இப்பொருளில்,
பழுதாவது, உடம்பின் உறுதிக்குப் பழுதாகிய பசியையும், உயிரின்
உறுதிக்குப் பழுதாகிய பாவத்தையும் குறிக்கும் என்க. பழுது
-
கெடுதி.
மேற்பாட்டிற் சொன்ன நாறு பறித்தல் - முடி சேர்த்தல்
-
உழுதல் - என்பவையும், இப்பாட்டிற் சொன்ன சால் உழுதல் -
சேறு ஊறித் தெளிதல் - இழுதாதல் - தெய்வம் தொழுதல் - நாறு
நடுதல் - என்பவையும் உழவுத் தொழிலின் ஒவ்வோர் சிறப்புப்
பகுதிகள். (Items of agricultural operations) இவ்வாறே மேலும்
காண்க.
இந்திர தெய்வதம்
- இந்திரன் என்னும் தெய்வம். மருத
நிலத்தின் தெய்வமும் மக்களும் தொழிலும் கூறியபடி. காவிரிநாடு -
முதற்பாட்டில் உரைத்தவை காண்க. 12
|
|
|
|